Enter your Email Address to subscribe to our newsletters

ராணிப்பேட்டை, 11 ஏப்ரல் (ஹி.ச.)
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அடுத்த பெல் நரசிங்கபுரம் சர்ச் தெருவில்
தனிநபர் வீட்டின் முன்பாக செடிக்கு ஓரத்தில் அட்டை பெட்டிக்குள் மனிதனின்
எலும்பு கூடுகள் இருப்பதாக தகவல் பரவியது.
இதுகுறித்து சிப்காட் போலீசாருக்கு
அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தகவல் தெரிவித்ததின் பேரில் மாவட்ட காவல் துணை
கண்காணிப்பாளர் கனகராஜ் மற்றும் சிப்காட் காவல் ஆய்வாளர் மங்கையர்க்கரசி
தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அட்டை பெட்டியை சோதனை
செய்தபோது மனிதனின் தலை கை கால் என மனிதனின் முழு உருவம் கொண்ட
எலும்பு கூடுகள் இருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் எலுப்பு கூடுகளை
பறிமுதல் செய்து முதல்கட்ட விசாரணையில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு ஓய்வு பெற்ற ஊழியர் ஜெயராம் என்பவர் இந்த வீட்டை அரசு மருத்துவராக உள்ள கீர்த்தி என்பவற்கு விற்பனை செய்து விட்டதாகவும், விற்பனை செய்த பின்னர்
ஜெயராமனின் மகள் மருத்துவ படிப்பு படித்து தற்போது எலும்பு பிரிவு (Ortho) மருத்துவராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவர்கள் வீட்டை விற்பனை செய்துவிட்டு சென்ற நிலையில் தற்போது
வீட்டை வாங்கிய எலும்பு பிரிவு அரசு மருத்துவர் கீர்த்தி இது மருத்துவ
படிப்பில் படிக்கும் மருத்துவர்கள் ஆய்வுக்காக வைத்திருப்பார்கள், இந்த
எலும்பு கூடுகள் மீது வார்னிஷ் அடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் விசாரணையில்
தெரியப்படுத்தப்பட்டது.
இருப்பினும் மக்கள் வசிக்கும் தெரு பகுதியில் எலும்பு கூடுகள் எடுத்து வந்து வெளியே போட்டது யார்?? யார் எடுத்து வந்தார்கள்?? என்ற
பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்கு பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி
கேமராக்களை தீவிரமாக ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவத்தால்
அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களிடையே பெரும் பயத்தையும் அதிர்ச்சியும்
ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam