Enter your Email Address to subscribe to our newsletters

புதுக்கோட்டை, 11 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
மார்ச் 30ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல், கடந்த 06.04.2026 அன்று மதியம் 3 மணியுடன் நிறைவு பெற்றது.
இதையடுத்து ஏப்ரல் 23ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலினும் ஒவ்வொரு மாவட்டத்திற்காக சென்று பிரசாரம் செய்து வருகிறார்.
அந்த வகையில், புதுக்கோட்டைக்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், இன்று காலை இலுப்பூரில் நடைபயிற்சி மேற்கொண்டு பொதுமக்களிடம் ஓட்டு சேகரித்தார்.
அப்போது, திமுக வேட்பாளர் செல்லபாண்டியனுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார்.
பொதுமக்களிடமும், கல்லூரி கலந்துரையாடினார். அப்போது, சிலர் அவருடன் கைகுலுக்கி செல்பி எடுத்துக் கொண்டனர்.
தொடர்ந்து, டீக்கடையில் அமர்ந்து டீக்குடித்து ஓட்டு சேகரித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின் பேசுகையில்,
திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எத்தனை பேர் வந்தாலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை வெல்ல முடியாது. தலைமைச் செயலாளரை மாற்றட்டும் என்ன வேண்டுமானாலும் பண்ணட்டும் அதைப் பற்றி கவலைப்படவில்லை.
தமிழ்நாட்டில் இருக்கிற அதிமுக டெல்லியில் கட்சியை அடமானம் வைத்து விட்டது அடிமையாகி விட்டார்கள். எடப்பாடி பழனிசாமி தோல்வியின் உச்சத்துக்குப் போய்விட்டார். அதனால் விரக்தியில் பேசிக் கொண்டிருக்கிறார்.
அதனால் இது தமிழ்நாட்டிற்கும் டெல்லிக்குமான தேர்தல். இந்த பகுதியில் உள்ள மக்கள் எழுச்சியைப் பார்த்தால் 234 தொகுதிகளிலும் திமுக வந்துவிடும் போல இருக்கிறது.
என்று கூறினார்.
Hindusthan Samachar / vidya.b