அனைவரின் ஆதரவும் தே.ஜ. கூட்டணிக்கு இருக்கும் - நயினார் நாகேந்திரன் எக்ஸ் பதிவு
சென்னை, 11 ஏப்ரல் (ஹி.ச.) பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில், இன்றைய தினம் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் நம் தேசிய ஜனநாயக கூட்டணியின் தோழமைக் கட்சியான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் காரைக்குடி சட்டமன்றத் தொகுதி வெற்றி
Nainar


சென்னை, 11 ஏப்ரல் (ஹி.ச.)

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில்,

இன்றைய தினம் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் நம் தேசிய ஜனநாயக கூட்டணியின் தோழமைக் கட்சியான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் காரைக்குடி சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் திரு. தேர்போகி V பாண்டி அவர்களுக்கு ஆதரவாக பொதுமக்களை நேரில் சந்தித்து உற்சாகமான வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டோம்.

இன்று காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் கூடிய மக்கள் கூட்டத்தில் இருக்கும் ஒவ்வொருவரின் முகத்திலும் இந்த விடியா திமுக ஆட்சியை எப்போது விரட்டி அடிப்போம் என்ற முடிவு தெளிவாகத் தெரிந்தது, மேலும் அவர்கள் அனைவரின் ஆதரவும் நம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இருக்கும் என்பது இன்றே முடிவு செய்யப்பட்டு விட்டது. காரைக்குடி சட்டமன்ற தொகுதி, மக்கள் குடுத்த உற்சாக வரவேற்பும் அவர்களின் பங்களிப்பும் நம் கூட்டணியின் வெற்றியை உறுதிப்படுத்த தயாராக உள்ளது.

வளர்ச்சியும் மக்கள் நலனும் நோக்கமாகக் கொண்ட நம் அணிக்கு, காரைக்குடி மக்களின் முழு ஆதரவு கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மக்கள் சக்தியுடன், நிச்சயமாக பிரம்மாண்ட வெற்றியை நோக்கி முன்னேறுவோம் என்று பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN