தேர்தல் பறக்கும் படை சோதனையில் டம்மி ஈவிஎம் இயந்திரங்கள் பறிமுதல்
சென்னை, 11 ஏப்ரல் (ஹி.ச.) தமிழ்நாட்டில் வரும் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. காவல்துறையுடன் இணைந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் தீவிர கண்காணி
Dummy EVM


சென்னை, 11 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழ்நாட்டில் வரும் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது.

காவல்துறையுடன் இணைந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை அண்ணாநகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரும்பாக்கம் 100 அடி சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சரக்கு ஆட்டோ ஒன்றை மடக்கி சோதனை செய்தனர்.

சோதனையில் அதனுள் டம்மி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) 100 பெட்டிகள் இருந்தது தெரியவந்தது.

மேலும் திமுக ஒரத்தநாடு சட்டமன்ற வேட்பாளர் வைத்தியலிங்கத்தின் புகைப்படங்கள் அடங்கிய 20,000 கார்டுகள் கொண்ட பார்சல்களும் அதில் இருந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த தேர்தல் பறக்கும் படையினர் அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.

அவற்றை அண்ணாநகர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

விசாரணையில் பார்சல் கொண்டு சென்றவர் சேலத்தை சேர்ந்த செல்வம் என்பதும் ஆட்டோ ஓட்டி வந்தவர் அண்ணாநகரைச் சேர்ந்த கணேசன் என்பதும் தெரிய வந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட டம்மி EVM -க்கள் பிளாஸ்டிக்கில் செய்யப்பட்ட பேட்டரி மிஷின் என்பது தெரியவந்தது.

திமுக ஒரத்தநாடு சட்டமன்ற வேட்பாளர் வைத்தியலிங்கம் புகைப்படம் பதித்த கார்டுகளின் உள்பகுதியில், பெண்கள் வைக்கும் சிறிய அளவு சிகப்பு நிற ஸ்டிக்கர் பொட்டு மொத்தமாக 20, 000 ஒவ்வொரு கார்டிலும் ஒட்டி வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

இதனை தனியார் பேருந்து மூலம் அனுப்பி வைக்க திட்டமிட்டு இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

வாக்கு சேகரிக்கும்போது இந்த டம்மி மிஷினை காண்பித்து தனது பெயர் எந்த இடத்தில் வருகிறது என்பதை தெரிவிக்க திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான முறையாக அனுமதியும், இதுகுறித்து வாக்காளர் செலவினங்களில் காண்பிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் வேட்பாளர் ஒரத்தநாடு என்பதால் அந்த சட்டமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும் பிடிப்பட்ட இரண்டு நபர்களிடமும் போலீசார் உடன் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணைக்கு பிறகு முழுமையான தகவல்கள் தெரியவரும் எனவும்

அண்ணாநகர் தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN