Enter your Email Address to subscribe to our newsletters

கிருஷ்ணகிரி, 11 ஏப்ரல் (ஹி.ச.)
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், வாக்காளர்களின் எண்ண ஓட்டத்தை பிரச்சாரத்தின்போது அறிய முடிகிறது., அதில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்பதை கூறுகிறார்கள். ஸ்டாலின் தமிழ்நாடு வெல்லும் என்கிறார்.
நலதிட்ட, மாநில உரிமைகளை மறுத்து, இரட்டை ஆட்சி முறையை திணிப்பது, கட்சிகளை நெருக்கடிக்குள்ளக்குவது மத்திய அரசை தோற்கடிக்க வேண்டுமென தமிழ்நாடு வெல்லும் என்கிறார்.
விவசாயிகளுக்கான ஊக்கத்தொகையை மத்திய நிதி அமைச்சர் நிறுத்த சொல்கிறார். இயற்கையோடு போராடி, பிறருக்கு வாழ்வளிக்கும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை சலுகை அல்ல, உரிமை.
நாடாளுமன்ற தொகுதி மறுவரையை சிபிஐ எதிர்க்கிறது. வடமாநிலங்களில் எண்ணிக்கை அதிகரித்து, தென்மாநிலங்களில் குறைத்து சதி செய்ய பார்க்கிறது.
தளி சட்டப்பேரவை சிபிஐ வேட்பாளரை ஆதரிக்க வந்துள்ளேன். தமிழக மக்களுக்கான கோரிக்கை ஒருக்கட்சியை வெல்வோம் என கூறவில்லை தமிழ்நாடு வெல்லும் என்கிறார்.
அதற்கு காரணம் சட்டமன்ற இறையான்மை வெல்ல வேண்டும், தமிழக மக்கள் ஒற்றுமையாக வாழ்வதை சிதைக்க ஆர்எஸ்எஸ், பாஜகவுக்கு அதிமுக துணைபோகிறது. அதுதான் திருப்பரங்குன்றம் விவகாரம்.
ஜனநாயகன் திரைப்படம் லீக்கானது குறித்த கேள்விக்கு,
தமிழ்நாடு தேர்தல் முக்கியமானது. இந்த நேரத்தில் திரைப்படத்தை முன்வைத்து திசை திருப்புவது ஏற்புடையதல்ல, சட்டம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
Hindusthan Samachar / ANANDHAN