தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மோதேலில் 20-ம் தேதி கேசிஆர் மாபெரும் பொதுக்கூட்டம்
ஜகித்யாலா, 11 ஏப்ரல் (ஹி.ச.) தெலங்கானா மாநிலம் ஜகித்யாலா மாவட்டம் மோதேலில் வருகிற 20-ம் தேதி பிஆர்எஸ் கட்சித் தலைவர் கே.சந்திரசேகர் ராவ் (கேசிஆர்) தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கூட்டம் நடைபெறும் இடத்தை கட்சி நிர
T


ஜகித்யாலா, 11 ஏப்ரல் (ஹி.ச.)

தெலங்கானா மாநிலம் ஜகித்யாலா மாவட்டம் மோதேலில் வருகிற 20-ம் தேதி பிஆர்எஸ் கட்சித் தலைவர் கே.சந்திரசேகர் ராவ் (கேசிஆர்) தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு கூட்டம் நடைபெறும் இடத்தை கட்சி நிர்வாகிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

மாவட்டத்தலைவர் வித்யாசாகர் ராவ், எம்.எல்.ஏ. கல்வகுண்ட்ல சஞ்சய், முன்னாள் அமைச்சர்கள் கொப்புல ஈஸ்வர், ஜீவன் ரெட்டி, முன்னாள் ஜட்பி தலைவர் தாவ வசந்தா, துல உமா உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், வித்யாசாகர் ராவ் நிருபர்களிடம் கூறியதாவது:–

வருகிற 20-ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

முன்னாள் அமைச்சர் கொப்புல ஈஸ்வர் கூறுகையில், மக்களின் விருப்பத்தின் பேரிலேயே ஜீவன் ரெட்டி பிஆர்எஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

காங்கிரஸ்ஆட்சியில் தெலங்கானா மாநிலம் சீர்குலைந்துள்ளது. மீண்டும் கேசிஆர் ஆட்சி வர வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர் என்றார்.

எம்.எல்.ஏ. கல்வகுண்ட்ல சஞ்சய் கூறுகையில், ஜீவன் ரெட்டி எப்போதும் பதவிக்காக அரசியல் செய்யாதவர். பிஆர்எஸ் கட்சி செய்த வளர்ச்சியை உணர்ந்தே அவர் கட்சியில் சேர்ந்துள்ளார்.

உள்ளூர்மக்கள் மற்றும் கட்சி தொண்டர்களின் விருப்பப்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஜீவன் ரெட்டியின் வழிகாட்டுதலுடன் முன்னேறுவோம் என்றார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA