பாடகி மங்க்ளி மீது மோசடி மற்றும் மிரட்டல் குற்றச்சாட்டு வழக்கு பதிவு
ஹைதராபாத் , 11 ஏப்ரல் (ஹி.ச.) ஹைதராபாத்தில் பிரபல நாட்டுப்புற பாடகி மங்க்ளி, அவரது சகோதரர் சிவா மற்றும் இயக்குநர் வேணு உடுகுல மீது பஞ்சாகுட்டா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து,போலீசார் கூற
T


ஹைதராபாத் , 11 ஏப்ரல் (ஹி.ச.)

ஹைதராபாத்தில் பிரபல நாட்டுப்புற பாடகி மங்க்ளி, அவரது சகோதரர் சிவா மற்றும் இயக்குநர் வேணு உடுகுல மீது பஞ்சாகுட்டா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து,போலீசார் கூறுகையில்,

அதிக லாபம் கிடைக்கும் என கூறி சுமார் 100 பேரிடமிருந்து முதலீட்டு பெயரில் பணம் வசூலித்ததாக மங்க்ளி மற்றும் அவரது சகோதரர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆனால், முதலீட்டாளர்களுக்கு வாக்குறுதியான லாபம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் வழக்கறிஞர் சுப்பாராவை அணுகினர்.

அதனைத் தொடர்ந்து, சுப்பாராவுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு மங்க்ளி, சிவா மற்றும் வேணு உடுகுல மிரட்டியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், தன்னை விபத்து ஏற்படுத்தி கொலை செய்து விடுவோம் என்று மங்க்ளி மற்றும் அவரது சகோதரர் மிரட்டியதாக சுப்பாராவ் போலீசில் தெரிவித்துள்ளார்.

தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில், பஞ்சாகுட்டா போலீசார் மங்க்ளி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA