ஹைதராபாதில் பெண்கள் பாதுகாப்புக்காக “ஷீ நேத்ரா” அணிகள் அறிமுகம்
ஹைதராபாத் , 11 ஏப்ரல் (ஹி.ச.) பெண்களின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில் ஹைதராபாத் நகர போலீசார் “ஷீ நேத்ரா” எனப்படும் சிறப்பு அணிகளை தொடங்கியுள்ளனர். நகரில் உள்ள 7 மண்டலங்களுக்கு தலா ஒரு அணியாக மொத்தம் 7 அணிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அ
N


ஹைதராபாத் , 11 ஏப்ரல் (ஹி.ச.)

பெண்களின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில் ஹைதராபாத் நகர போலீசார் “ஷீ நேத்ரா” எனப்படும் சிறப்பு அணிகளை தொடங்கியுள்ளனர்.

நகரில் உள்ள 7 மண்டலங்களுக்கு தலா ஒரு அணியாக மொத்தம் 7 அணிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த அணிகளை போலீஸ் கமிஷனர் சஜ்ஜனார் தொடங்கி வைத்து, அதிநவீன கேமரா கண்டறியும் கருவிகளை வழங்கினார்.

பெண்களின் தனியுரிமை மற்றும் மரியாதைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ரகசிய கேமராக்களை கண்டறிந்து ஒழிப்பதே இந்த அணிகளின் முக்கிய நோக்கமாகும்.

ஹோட்டல்கள், மால்கள், விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் மறைமுக கேமராக்கள் பொருத்தப்படுகிறதா என்பதை கண்டறிய சிறப்பு கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.

குறிப்பாக டிரயல் ரூம்கள் மற்றும் தனியார் இடங்களில் திடீர் சோதனைகள் நடத்தப்பட உள்ளன.

இதற்காக “ஷீ நேத்ரா” அணிகளுக்கு இரண்டு கட்டங்களாக சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தனியார் வளாகங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது அந்த நிறுவனங்களின் பொறுப்பு என போலீஸ் கமிஷனர் எச்சரித்துள்ளார்.

விதிகளை மீறினால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்படும் என்றும் கூறினார்.

மேலும் தேவையான பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் பணியாளர்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நிறுவனத்திலும் ‘கஸ்டமர் சேஃப்டி இன்சார்ஜ் ’ நியமனம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஷீ டீம்ஸுடன் ஒருங்கிணைந்து செயல்பட நொடல் அமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமான பொருட்கள் அல்லது செயல்பாடுகள் கண்டறியப்பட்டால் உடனடியாக போலீசுக்கு தகவல் அளிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA