Enter your Email Address to subscribe to our newsletters

கடலூர், 11 ஏப்ரல் (ஹி.ச.)
கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரின் தமிழக வெற்றிக்கழக இணை செயலாளராக சரண்ராஜ் பயணித்து வந்தார்,
குறிப்பாக விஜய் நற்பணி மன்றத்திலிருந்து தொடர்ந்து பணியாற்றி வந்த நிலையில்
விஜய் கட்சி துவங்கியவுடன் இவருக்கு இணைச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் சிதம்பரம் சட்டமன்ற வேட்பாளராக பாரி என்பவர் அறிவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து பாரி வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் அவரின் வேட்பு மனு
முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்தது.
மாற்று வேட்பாளராக பாரியின் தந்தை வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் அவரது மனு
ஏற்கப்பட்டது. இதனால் கட்சி நிர்வாகிகள் இடையே அதிருப்தி நிலவி வந்த நிலையில் தற்போது தமிழக வெற்றிக்கழக சிதம்பரம் இணை செயலாளர் சரண்ராஜ் வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் முன்னிலையில் 100க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைத்துக் கொண்டார்.
திடீரென தமிழக வெற்றி கழகத்திலிருந்து 100-க்கும் மேற்பட்ட தொண்டர்கள்
திமுகவில் இணைத்து கொண்ட சம்பவம் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மத்தியில்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றி கழகத்திலிருந்து எதற்காக வெளியேறினீர்கள் எனக் கேட்டபோது கட்சியின் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பாரி தனது தந்தை நெடுஞ்செழியனுக்கு தேர்தலில் போட்டியிட விட்டுக் கொடுக்கும் வகையில் வேண்டுமென்றே மனுவை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை எனவும் பாரி மற்றும் அவரது தந்தைக்கு ஒரு
வழக்கறிஞர் தான் பூர்த்தி செய்ததாகவும் அதில் எவ்வாறு தவறு நடக்கும் எனவும் கேள்வி எழுப்பினார்.
அதனால் தான் தங்களை தமிழக வெற்றி கழகத்திலிருந்து விலகி திமுகவில் இணைத்து
கொண்டதாகவும் சரண்ராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P