Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 11 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தொண்டர்களுக்கு முக்கிய அழைப்பை எக்ஸ் தளத்தில் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
வாகை சூடும் வரலாறு திரும்பும் இந்தப் பயணத்தில் ஒவ்வொருவரின் பங்களிப்பும் மிக முக்கியமானது. மாற்றத்திற்கான சக்தியாக நாம் சரியான பாதையில் முன்னேறி வருகிறோம், என்று தெரிவித்துள்ளார்.
தேர்தல் நாள் நெருங்கிவரும் நிலையில், வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் உடனடியாக களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். அடுத்த பத்து நாட்களில் காலை, மாலை என தினமும் இரு வேளைகளில் மக்களை வீடு தேடி நேரில் சந்தித்து, கட்சி வேட்பாளர்களுக்கு ‘விசில்’ சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும், மாநிலம் முதல் மாவட்டம் வரை உள்ள அனைத்து நிலை நிர்வாகிகளும் வேட்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும், தோழமை உணர்வுடன் ஒருங்கிணைந்து தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்தத் தேர்தல் நமக்கானது மட்டுமல்ல,ஒரு தலைமுறைக்கான மாற்றத்தை உருவாக்கும் தேர்தல். தன்னலமற்ற உழைப்பின் மூலம் வெற்றியை உறுதி செய்யலாம்,என்று அவர் கூறியுள்ளார்.
ஜனநாயகத்தை நிலைநாட்டும் போராட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும், “வெற்றி நிச்சயம்” என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ