Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 ஏப்ரல் (ஹி.ச.)
விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் சபரிநாதன் போட்டியிடுகின்றார்.
நேற்று சபரிநாதன் பூந்தமல்லி திருவீதி அம்மன் கோவில் சந்திப்பில் தனது ஆதரவாளர்களுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீசி தாக்கியதாக தெரிகிறது..
உடனே பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த தொண்டர்கள் நிர்வாகிகள் அந்த நபரை பிடித்து கேட்ட போது இது திமுக கோட்டை நீங்கள் உள்ளே வரக்கூடாது என்று கூறி வீண் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி கட்சி பொறுப்பாளர் ராமச்சந்திரனை கல்லால் அடித்து அவரது இருசக்கர வாகனத்தையும் அடித்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
பின்னர் இந்த சம்பவம் குறித்து அண்ணாநகரை சேர்ந்த தவெக வழக்கறிஞர் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர் பாண்டியராஜன் என்பவர் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி திமுக நிர்வாகிகள் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ