Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழ்நாடு அரசியல் களம் நாளுக்கு நாள் சூடாகி கொண்டே இருக்கும் வேளையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் கடும் வார்த்தை மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிலும் சசிகலா காலில் விழுந்து எடப்பாடி பழனிசாமி ஆசி பெறும் புகைப்படத்தை தான் செல்லும் அனைத்து இடங்களிலும் காட்டி உதயநிதி ஸ்டாலின் விமர்சனத்தை முன்வைத்து வருகிறார். அதற்கு பதிலடி தரும் வகையில் எடப்பாடி பழனிசாமியும் உதயநிதி குறித்து காட்டமாக விமர்சித்து வருகிறார்.
பரபரப்பான இந்த சூழ்நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் சென்னையில் இரந்து ஒரே விமானத்தில் திருச்சி விமான நிலையம் செல்கின்றனர். திருச்சியில் இருந்து தஞ்சாவூருக்கு செல்லும் இபிஎஸ் அங்கு நடைபெறும் பிரச்சாரத்தில் பங்கேற்கிறார். அதேபோல திருச்சியில் நடைபெற உள்ள பிரச்சார கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்.
இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்க நேரிட்டால் என்ன மாதிரியான சூழல் உருவாகும் என அரசியல் களத்தில் பேசு பொருள் ஆகியுள்ளது.
கடும் வார்த்தை பிறக்கும் மத்தியில் எதிரெதிர் துருவத்தை சேர்ந்த இரு முக்கிய தலைவர்களும் சந்திக்க இருப்பது அரசியல் களத்தை உற்று நோக்க வைத்துள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P