யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து 10 பேர் பலி
உத்தரப்பிரதேசம், 11 ஏப்ரல் (ஹி.ச.) உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள பிருந்தாவனத்தில் யமுனை ஆற்றில் பக்தர்கள் படகு சவாரி செய்வது வழக்கம். இந்நிலையில், லூதியானா நகரிலிருந்து சுமார் 32 முதல் 33 பக்தர்கள் பாங்கே பிஹாரி கோவில் தரிசனம் செ
Y


உத்தரப்பிரதேசம், 11 ஏப்ரல் (ஹி.ச.)

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள பிருந்தாவனத்தில் யமுனை ஆற்றில் பக்தர்கள் படகு சவாரி செய்வது வழக்கம்.

இந்நிலையில், லூதியானா நகரிலிருந்து சுமார் 32 முதல் 33 பக்தர்கள் பாங்கே பிஹாரி கோவில் தரிசனம் செய்ய பிருந்தாவனத்திற்கு வந்திருந்தனர்.

தரிசனம் முடித்த பிறகு, அவர்கள் யமுனை ஆற்றில் படகு சவாரி செய்துகொண்டிருந்தனர்.

அப்போது சிருங்கார் காட் அருகே அமைந்திருந்த மிதவைப் பாலத்தில் படகு மோதியது. இதனால் படகு கட்டுப்பாட்டை இழந்து திடீரென கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் மீட்கப்பட்டனர். சிலர் காணாமல் போனதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA