கும்மிடிப்பூண்டியில் விஜய் பிரசாரம் திடீர் ரத்து – 19ஆம் தேதி மாற்றம்
சென்னை, 11 ஏப்ரல் (ஹி.ச) திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கவரப்பேட்டையில் வருகிற 13ஆம் தேதி (திங்கள்) நடைபெற இருந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்களின் தேர்தல் பிரசாரக் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள
TVK Vijay


சென்னை, 11 ஏப்ரல் (ஹி.ச)

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கவரப்பேட்டையில் வருகிற 13ஆம் தேதி (திங்கள்) நடைபெற இருந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்களின் தேர்தல் பிரசாரக் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்திற்கு முன்பே அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், கட்சி நிர்வாகிகள் திடீர் மாற்றம் செய்து பிரசாரத்தை ஒத்திவைத்துள்ளனர்.

இதற்கான மாற்று தேதியாக வருகிற 19ஆம் தேதி அதே இடத்தில் விஜய் பங்கேற்கும் பிரசாரம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதனுடன், கன்னியாகுமரியில் நடைபெற உள்ள விஜயின் பிரசாரம் திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு பொதுக்கூட்டத்திற்கு பதிலாக சாலை வலம் சென்று மக்களை நேரடியாக சந்திக்கும் வகையில் நிகழ்ச்சி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற இருந்த பிரசாரம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டாலும், அடுத்த கட்டத்தில் மேலும் தீவிரமாக நடைபெறும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Hindusthan Samachar / P YUVARAJ