மே.வங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் அகதிகளுக்கு குடியுரிமை - பிரதமர் மோடி பேச்சு
மேற்குவங்கம், 11 ஏப்ரல் (ஹி.ச.) மேற்கு வங்க சட்டப்பேரவைக்கான தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதன்படி, ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் கட்ட தேர்தலும் 29ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலும் நடைபெற உள்ளது. இதையொட்டி பூர
மோடி


மேற்குவங்கம், 11 ஏப்ரல் (ஹி.ச.)

மேற்கு வங்க சட்டப்பேரவைக்கான தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

இதன்படி, ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் கட்ட தேர்தலும் 29ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலும் நடைபெற உள்ளது.

இதையொட்டி பூர்வ பர்தமன் மாவட்டத்தில் உள்ள கத்துவா நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் மோடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர்,

தேர்தலில் மக்களின் ஆர்வம் உற்சாகம் ஆற்றலை கண்டு வியப்பதாகவும் மக்கள் மாற்றத்திற்கு தயாராகிவிட்டதாகவும் தெரிவித்தார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இதுநாள் வரை மக்களுக்கு அச்சத்தை மட்டுமே தந்துள்ளதாகவும் அந்த அச்சத்தை வேரறுக்க பாஜக உறுதி கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பு மட்டுமே பாஜகவுக்கு முதன்மையானது என்ற மோடி மேற்கு வங்கத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் உறுதியாக உள்ளது என்றார். மேலும் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதற்காகவே பாஜக குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்தது என்றும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அகதிகள் மத்தியில் அச்சத்தை பரப்ப முயற்சி செய்வதாகவும் குற்றம் சாட்டினார்.

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு சிஏஏ கீழ் குடியுரிமை வழங்கும் செயல்முறை விரைவு படுத்தப்படும் என உறுதி அளித்தார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P