உலக பார்க்கின்சன் தினம்!
சென்னை, 11 ஏப்ரல் (ஹி.ச.) ஆண்டுதோறும் ஜேம்ஸ் பார்க்கின்சன் பிறந்த தினமான ஏப்ரல் 11ஆம் தேதி, உலக பார்க்கின்சன் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. கை நடுக்கம் உள்ளிட்ட நரம்பியல் பாதிப்பு ஏற்படும் பார்க்கின்சன் என்னும் நோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்ப
கா


சென்னை, 11 ஏப்ரல் (ஹி.ச.)

ஆண்டுதோறும் ஜேம்ஸ் பார்க்கின்சன் பிறந்த தினமான ஏப்ரல் 11ஆம் தேதி, உலக பார்க்கின்சன் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

கை நடுக்கம் உள்ளிட்ட நரம்பியல் பாதிப்பு ஏற்படும் பார்க்கின்சன் என்னும் நோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இத்தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஜேம்ஸ் பார்க்கின்சன் 1755ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் பிறந்தார்.

இவர்தான் பார்க்கின்சன் நோய், அதன் அறிகுறிகள், விளைவுகள் குறித்து முதல்முறையாக விளக்கினார். இது மத்திய நரம்பு மண்டல நோய் என்பதை அடையாளம் கண்டார்.

இந்த நோய்க்கு பக்கவாத நடுக்கம் (Paralysis Agitans), முடக்குவாத நடுக்கம்

(Shaking Palsy) என்று பெயரிட்டார்.

பின்னாளில் இது 'பார்க்கின்சன் நோய்' என்று இவரது பெயரிலேயே குறிப்பிடப்படுகிறது.

முற்றிலும் மாறுபட்ட பல துறைகளில் ஈடுபட்டு, அவற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கிய ஜேம்ஸ் பார்க்கின்சன் 1824ஆம் ஆண்டு மறைந்தார்.

Hindusthan Samachar / Durai.J