திருப்பதி கோவிலில் பக்தர்கள் பெரும் திரள்- ஒரே நாளில் ரூ.3.22 கோடி உண்டியல் காணிக்கை
திருப்பதி , 12 ஏப்ரல் (ஹி.ச.) ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள திருப்பதி வெங்கடேஸ்வரர் கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. ஒரே நாளில் கோவிலின் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடி 22 லட்சமாக பதிவாகியுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்த
T


திருப்பதி , 12 ஏப்ரல் (ஹி.ச.)

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள திருப்பதி வெங்கடேஸ்வரர் கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

ஒரே நாளில் கோவிலின் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடி 22 லட்சமாக பதிவாகியுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினந்தோறும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் காணிக்கை வருவாயும் உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை முதலே திருப்பதியில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

குறிப்பாக இலவச தரிசனத்திற்கு வந்தவர்கள் பல மணி நேரங்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். சில இடங்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் பக்தர்கள் சிரமத்தையும் எதிர்கொண்டனர்.

வார இறுதி நாள் மற்றும் சிறப்பு தரிசன காலம் என்பதால் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனை முன்னிட்டு பாதுகாப்பு பணியாளர்கள் கூடுதலாக பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மேலும், பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய குடிநீர், கழிப்பிடம், மருத்துவ உதவி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA