Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியான டேவிட்சன் தேவாசீர்வாதம் அப்பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக ஆயுதப் படை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்திற்கு திமுக எம்பி டிஆர் பாலு கடிதம் எழுதினார்.
அதில் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளை மட்டுமே பணிமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ள நிலையில், தேர்தல் பணியில் ஈடுபடாத லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியை மாற்றியதற்கு ஆட்சேபனை தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், சந்தீப் மிட்டல் ஆயுதப்படை இயக்குநராக மட்டும் செயல்படுவார் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதனிடையே, தமிழ்நாடு உள்துறை செயலாளர் தீரஜ்குமார் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக, மணிவாசன் உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை இணை இயக்குநராகவும், ஐஜியாகவும் உள்ள துரைகுமாரை, லஞ்ச ஒழிப்புத்துறை பொறுப்பு இயக்குநராக நியமித்து புதிதாக பொறுப்பேற்ற உள்துறை செயலாளர் மணிவாசன் உத்தரவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P