பிரபல பழம்பெரும் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்
மும்பை, 12 ஏப்ரல் (ஹி.ச.) இசைக்குயில் லதா மங்கேஷ்கரின் தங்கையும் பிரபல பழம்பெரும் பின்னணி பாடகியுமான ஆஷா போஸ்லே ( 92) நேற்று மாரடைப்பு மற்றும் நுரையீரல் கோளாறு காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில்
Asha Bhosle has passed away.


மும்பை, 12 ஏப்ரல் (ஹி.ச.)

இசைக்குயில் லதா மங்கேஷ்கரின் தங்கையும் பிரபல பழம்பெரும் பின்னணி பாடகியுமான ஆஷா போஸ்லே ( 92) நேற்று மாரடைப்பு மற்றும் நுரையீரல் கோளாறு காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் அவர் இன்று (ஏப்ரல் 12) சிகிச்சை பலன் அளிக்காமல் காலமானார். மகாராஷ்டிரா மாநிலம் சாங்கியில் 1933 ஆம் ஆண்டு பிறந்த ஆஷா போன்ஸ்லே ஹிந்தி தமிழ் உட்பட பல மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் மேலான பாடல்களை பாடியுள்ளார்.

ஆஷா போஸ்லே தனது 10 வயதில் பாடத் தொடங்கினார். தமிழில், 'ஓ பட்டர்ஃப்ளை', 'நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி', 'செண்பகமே செண்பகமே', செப்டமர் மாதம், செப்டம்பர் மாதம் போன்ற பல பாடல்களைப் பாடியுள்ளார். தமிழில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பல பாடல்களை பாடியுள்ளார்.

பாடகி ஆஷா போஸ்லேவின் இறுதி நிகழ்வுகள் நாளை (ஏப்ரல் 13) மும்பை சிவாஜி பார்க் பகுதியில் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மகன் ஆனந்த் போஸ்லே கூறுகையில்,

ஆஷா இன்று மறைந்தார். இறுதி அஞ்சலி செலுத்த விரும்புவோர் நாளை காலை 11 மணிக்கு இல்லத்திற்கு வரலாம். மாலை 4 மணிக்கு இறுதி சடங்கு நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

ஆஷா போஸ்லே மறைவிற்கு திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b