Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 ஏப்ரல் (ஹி.ச)
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.
தேர்தல் வர இன்னும் சில நாட்களே உள்ளதால் அரசியல் கட்சித் தலைவர்கள், வாக்குறுதிகளை மக்களிடம் தெரிவித்தும், மற்ற கட்சிகளை விமர்சித்தும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது.
இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் இரண்டு நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
இரண்டு நாள் பயணமாக நான் தமிழகம் வருகிறேன்.
இந்தப் பயணத்தின் போது, இராமநாதபுரம் மற்றும் அறந்தாங்கியில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டங்களில் உரையாற்றுகிறேன்.
மேலும் சாத்தூர், மதுரை தெற்கு மற்றும் கந்தர்வக்கோட்டை ஆகிய தொகுதிகளில் நடைபெறவுள்ள ரோட் ஷோக்களிலும் பங்கேற்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b