Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 ஏப்ரல் (ஹி.ச)
தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) டிஜிபியாக பணியாற்றி வந்த டேவிட்சன் தேவாசீர்வாதம், அண்மையில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நிலையில், தற்போது மருத்துவ விடுப்பில் செல்ல இருப்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதய சம்பந்தமான உடல்நலப் பிரச்சனை காரணமாக, மருத்துவரின் ஆலோசனையின் பேரில் ஓய்வு அவசியம் என கூறப்பட்டதைத் தொடர்ந்து, அவர் 22 நாட்கள் மருத்துவ விடுப்பு பெற முடிவு செய்துள்ளார்
இதற்காக மாநில டிஜிபிக்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், ஏப்ரல் 9ஆம் தேதி முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை மருத்துவ விடுப்பில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றிய நடவடிக்கை நிர்வாக மற்றும் அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றிருந்தது.
அதற்கிடையே மருத்துவ விடுப்பு கோரியிருப்பதும் மேலும் பேசுபொருளாகியுள்ளது.
மேலும், சமீபத்தில் டேவிட்சன் தேவாசீர்வாதம் தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் வெளியிட்ட பதிவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அந்த பதிவு குறித்து பல்வேறு தரப்புகளில் விமர்சனங்கள் எழுந்ததாக கூறப்படுகிறது.
இந்தச் சர்ச்சைக்கு பின்னரே அவர் மாற்றப்பட்டதாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதனால், நிர்வாக மாற்றம், உடல்நலக் காரணம் மற்றும் சமூக வலைதள சர்ச்சை ஆகியவை ஒன்றாக இணைந்து இந்த விவகாரம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ