அதிமுகவும், திமுகவும் ஒரே கட்சிகள் தான் அவர்களுக்கு வாக்களித்து நீங்கள்  தோற்றுப் போகாதீர்கள் - சீமான்
தேனி, 12 ஏப்ரல் (ஹி.ச.) தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கோமதியை ஆதரித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆண்டிப்பட்டி பகுதியில் இன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். பிரச்சாரத்தில் பேசிய அவர்
சீமான்


தேனி, 12 ஏப்ரல் (ஹி.ச.)

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கோமதியை ஆதரித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆண்டிப்பட்டி பகுதியில் இன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

பிரச்சாரத்தில் பேசிய அவர் தெரிவித்ததாவது;

ஆண்டிபட்டி தொகுதியில் பல பிரச்சினைகள் உள்ளது மேய்ச்சல் நிலங்களில் ஆடு, மாடு மேய்ச்சலுக்கு செல்ல வனத்துறை தடுக்கின்றனர், மேய்ச்சல் நிலம் எல்லாம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஆண்டிபட்டி தொகுதியில் அதிமுக, திமுகவில் ஒரே வீட்டில் உள்ள அண்ணன் தம்பி வேட்பாளராக போட்டியிடுகிறார்கள், கடந்த தேர்தலில் தம்பி உதவி செய்து அண்ணன் வெற்றிபெறுவது, இந்த தேர்தலில் அண்ணன் உதவி செய்து தம்பி வெற்றி பெறுவது இது என்ன மாதிரியான அரசியல் என்ன தெரியவில்லை.

வாக்குக்கு காசு கொடுப்பதால் ஜனநாயகன் செத்து பனநாயகம் வென்றுள்ளது, பணநாயகத்தை வீழ்த்தி மாண்புமிகு ஜனநாயகத்தை உருவாக்க வேண்டும்

கடலுக்கு போய் தனது அப்பாவின் பேனைவை வைப்பேன் என ஸ்டாலின் சொன்னபோது அதை தடுத்து வைத்து நிறுத்தி வைத்திருப்பவன் உங்கள் மகன்(சீமான்).

மக்களுக்கு பிரச்சினை தந்தவர்கள் ஒரு பக்கம் பிரச்சினையை தீர்ப்பவர்கள் நாங்கள் ஒரு பக்கம் எங்கள் இருவருக்கும் இடையே தான் போட்டி.

நான் ஏசி பஸ் தருகிறேன் அதில் காசு கொடுத்து போங்கள், இலவசங்களை நோக்கி சென்று உங்கள் தன்மானங்களை இழக்காதீர்கள்.

நிலம் வளம் சார்ந்த தொழிற்சாலைகளை தொடங்குவேன் நாட்டு கோழி வளர்ப்பேன், ஆடு, கோழி வளர்ப்பேன் அதில் இருந்து ஆண்டிபட்டி தொகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பேன்.

நான் உங்களை ஏமாற்ற வேண்டும் என்று நினைத்து இருந்தால் அவர்கள் 10 ஆயிரம் ரூபாய் கொடுக்கும் போது நான் 20 ஆயிரம் கொடுப்பேன் என சொல்லி இருக்க மாட்டேனா, வீட்டிற்கு ஹெலிகாப்டர், 1 கிலோ தங்கம் தந்து இருப்பேன் என என்னால் சொல்ல முடியாதா.

எத்தனை காலத்திற்கு இரட்டை இலைக்கு ம், உதயசூரியனுக்கும் ஓட்டு போடுவீர்கள் இரண்டு கட்சிகளும் மீண்டும் வந்தால் டாஸ்மாக் மூடப்படுமா, கொலை கொள்ளை நடக்காமல் இருக்குமா?

மலைகளை சுரண்டும் இந்த குவாரி உரிமையாளர்களை ஒரு நாள் மரத்தில் கட்டி வைத்து பச்சை மரத்தால் வெளுத்து எடுப்பேன், கனிம வளங்களை கணக்கு இல்லாமல் வெட்டி எடுத்துக்கொள்ள என அனுமதி கொடுத்தது திமுகவும், அதிமுவும் தான்.

எனக்கு வாக்கு போடு போடாமல் போடு ஆனால் வாக்கு செலுத்தும் போது சிந்தித்து வாக்கு செலுத்து.

அதிமுகவும், திமுகவும் இரண்டும் ஒரே கட்சிகள் தான் அதிமுகவில் இருந்து எத்தனை அமைச்சர்கள் திமுகவில் சென்றுள்ளார்கள் இந்த தொகுதியில் கூட ஒரே வீட்டில் உள்ள அண்ணன், தம்பி இரண்டும் கட்சிகளிலும் வேட்பாளராக போட்டியிடுகிறார்கள்.

இரட்டை இலைக்கும், உதயசூரியனுக்கு வாக்களித்து அவர்கள் வென்றார்கள் எம்எல்ஏ ஆனார்கள், அமைச்சர்கள் ஆனார்கள் ஆனால் நீங்கள் தோற்று போனீர்கள், எனவே இந்த முறை எங்களுக்கு வாக்களித்து நீங்கள் வெல்லுங்கள் என வாக்கு சேகரிப்பில் சீமான் பேசினார்.

Hindusthan Samachar / GOKILA arumugam