Enter your Email Address to subscribe to our newsletters

மயிலாடுதுறை, 12 ஏப்ரல் (ஹி.ச.)
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 10.04.2026 அன்று காலை 10.00 மணிக்கு கிளிஞ்சல் மேடு பகுதியைச் சேர்ந்த வீரவேல் என்பவருக்கு சொந்தமான IND-PY-PK-1338 என்ற பதிவு எண்ணுடைய படகு கடலுக்கு புறப்பட்டது.
அந்த படகில் காரைக்காலைச் சேர்ந்த 7 மீனவர்கள், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் மற்றும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஒருவருடன் மொத்தம் 12 பேர் காரைக்காலில் இருந்து சுமார் 60 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில், 11ஆம் தேதி இரவு சுமார் 9.00 மணியளவில் இலங்கை கடற்படையினர் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டி 12 மீனவர்களையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கையின் காங்கேயன் துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam