‘ஃபிட் இந்தியா சண்டேஸ் ஆன் சைக்கிள்’ நிகழ்வு - மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பங்கேற்பு
புதுடெல்லி, 12 ஏப்ரல் (ஹி.ச.) ‘ஃபிட் இந்தியா சண்டேஸ் ஆன் சைக்கிள்’ திட்டம் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், இந்திய அரசு, இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் கூட்டு அமைப்புகளான இந்திய சைக்கிள் கூட்டமைப்பு, மல்லர்கம்பம் சங்கம், குடோ
‘Fit India Sundays on Cycle’ Event


புதுடெல்லி, 12 ஏப்ரல் (ஹி.ச.)

‘ஃபிட் இந்தியா சண்டேஸ் ஆன் சைக்கிள்’ திட்டம் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், இந்திய அரசு, இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் கூட்டு அமைப்புகளான இந்திய சைக்கிள் கூட்டமைப்பு, மல்லர்கம்பம் சங்கம், குடோ சங்கம், நமோ சைக்கிள் கிளப்புகள், இந்திய கயிறு தாண்டுதல் கூட்டமைப்பு, மை பாரத் மற்றும் யோகாசன பாரத் ஆகியவற்றால் வாரந்தோறும் ஒருங்கிணைக்கப்படுகிறது.

இந்த சைக்கிள் நிகழ்வு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் ஒரே நேரத்தில் நடத்தப்படுகிறது.

இதில் SAI மண்டல மையங்கள், தேசிய சிறப்பு மையங்கள், SAI பயிற்சி மையங்கள், கேலோ இந்தியா மாநில சிறப்பு மையங்கள் மற்றும் கேலோ இந்தியா மையங்கள் பங்கேற்கின்றன.

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவின் வழிகாட்டுதலின் கீழ் டிசம்பர் 2024-ல் தொடங்கப்பட்டதிலிருந்து, இந்த முன்னெடுப்பு ஒரு முக்கிய சமூக நல இயக்கமாக விரிவடைந்துள்ளது.

ஆயிரக்கணக்கான இடங்களில் வாரந்தோறும் லட்சக்கணக்கான குடிமக்கள் பங்கேற்கும் இந்நிகழ்வு, உடல் பருமன் மற்றும் மாசுபாடு போன்ற சவால்களை எதிர்கொண்டு, உடற்பயிற்சியை வாழ்க்கை முறையாக மாற்ற வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு ஆதரவளிக்கிறது.

அந்த வகையில் ‘ஃபிட் இந்தியா சண்டேஸ் ஆன் சைக்கிள்’ திட்டத்தின் 69-வது வார நிகழ்வு இன்று காலை புதுடெல்லியில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆரோக்கியமான மற்றும் கட்டுக்கோப்பான சமூகமே வளமான தேசத்தை உருவாக்கும் என்று வலியுறுத்தினார்.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாண்டவியா கூறியதாவது,

ஞாயிற்றுக்கிழமை சைக்கிள் நிகழ்வு ‘ஃபிட் இந்தியா’ செய்தியை முன்னெடுக்கும் தேசிய இயக்கமாக மாறியுள்ளது.

ஆரோக்கியமான, வலிமையான சமூகத்தை உருவாக்குவது தேசிய வளத்தை அடைவதற்கு இன்றியமையாதது. இந்த முன்னெடுப்பு வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய ஒரு படி.

ஞாயிற்றுக்கிழமை சைக்கிள் ஓட்டுதல் தேசிய இயக்கமாக மாறிவிட்டது. பிரதமர் மோடியால் ஈர்க்கப்பட்டு, இளைஞர்கள் உடற்பயிற்சி குறித்து அதிக விழிப்புணர்வு பெற்றுள்ளனர். அவரது ‘ஃபிட் இந்தியா’ செய்தி வெறும் முழக்கமல்ல, வளர்ச்சியடைந்த தேசத்துக்கான அவசியம்.

ஆரோக்கியமான குடிமக்கள் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குகிறார்கள், ஆரோக்கியமான சமூகம் வளமான தேசத்தை உருவாக்குகிறது. வளர்ச்சியடைந்த இந்தியாவை அடைய, நாம் அனைவரும் இந்த சைக்கிள் இயக்கத்தில் இணைந்து, உடற்பயிற்சியின் செய்தியைப் பரப்பி, நம்மை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / vidya.b