ஐபிஎல் சென்னை சூப்பர் கிங்ஸ் 23 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது - சஞ்சு சாம்சன் அதிரடி சதம்
சென்னை , 12 ஏப்ரல் (ஹி.ச.) இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பே
C


சென்னை , 12 ஏப்ரல் (ஹி.ச.)

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள், டெல்லி பந்துவீச்சாளர்களை கட்டுக்குள் வைத்தனர்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது.

அணியின் சார்பில் சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடி 56 பந்துகளில் 115 ரன்கள்

(நாட் அவுட்) எடுத்து அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றார்.

அவருக்கு துணையாக ஆயுஷ் மாத்ரே 36 பந்துகளில் 59 ரன்கள் சேர்த்தார். இருவரும் இணைந்து நூற்றுக்கும் மேற்பட்ட ரன் கூட்டணியை அமைத்தது குறிப்பிடத்தக்கது.

பின்னர் 213 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணி தொடக்கத்தில் நன்றாக ஆடியது. டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 38 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். பதும் நிசாங்கா 24 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்தார்.

இருப்பினும் நடுப்பகுதியில் விக்கெட்டுகள் தொடர்ந்து சரிந்ததால் டெல்லி அணி 20 ஓவர்களில் 189 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

சென்னை அணியின் பந்துவீச்சில் ஜேமி ஓவர்டன் அபாரமாக பந்து வீசி 4 ஓவர்களில் 18 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

அன்ஷுல் காம்போஜ் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்டது.

இந்தப் போட்டியின் ஆட்டநாயகன் விருது சஞ்சு சாம்சனுக்கு வழங்கப்பட்டது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA