ஆஷா போஸ்லே மறைவு – இளையராஜா ஆழ்ந்த இரங்கல்
சென்னை, 12 ஏப்ரல் (ஹி.ச.) பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே மறைவு செய்தி அறிந்து மிகவும் துயரமடைந்ததாக இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், ஆஷா போஸ்லே அவர்கள் என்னிடம் மிகுந்த அன்பும் பாசமும் வ
Ila


சென்னை, 12 ஏப்ரல் (ஹி.ச.)

பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே மறைவு செய்தி அறிந்து மிகவும் துயரமடைந்ததாக இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில்,

ஆஷா போஸ்லே அவர்கள் என்னிடம் மிகுந்த அன்பும் பாசமும் வைத்திருந்தவர். அதே நேரத்தில், ஒரு பின்னணி பாடகியாக என்னிடம் மிகுந்த மரியாதையுடனும் அன்புடனும் நடந்து கொண்டார்.

அந்த நினைவுகளை நான் ஒருபோதும் மறக்க முடியாது.

என் வாழ்நாளில் மறக்க முடியாத இடத்தை பிடித்தவர் ஆஷா போஸ்லே அவர்கள் தான். அவருடைய திறமைக்கு அளவே இல்லை. வேறு எந்த குரலோடும் ஒப்பிட முடியாத தனித்துவமான குரல் அவருடையது.

அவர் மறைவு எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. சென்னைக்கு வரும்போதெல்லாம் என்னை சந்தித்து செல்லும் அன்பு சகோதரி. அவருடைய அன்பையும் பாசத்தையும் என்றும் மறக்க முடியாது. திரையுலகம் என்றும் மறக்க முடியாத குரல் அவருடையது.

அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். அவருடைய குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ