வீதியோர சிறுவர்களுக்கான சர்வதேச தினம்.!
சென்னை, 12 ஏப்ரல் (ஹி.ச.) உலகெங்கும் கோடிக்கணக்கில் உள்ள வீதியோர சிறுவர்களின் நல்வாழ்வுக்கும், அவர்களின் உரிமைகளுக்காகவும் குரல்கொடுக்கும் தினமாக வீதியோர சிறுவர்களுக்கான சர்வதேச தினம் (International Day for Street Children) ஆண்டுதோறும் ஏப்ரல் 12
v


சென்னை, 12 ஏப்ரல் (ஹி.ச.)

உலகெங்கும் கோடிக்கணக்கில் உள்ள வீதியோர சிறுவர்களின் நல்வாழ்வுக்கும், அவர்களின் உரிமைகளுக்காகவும் குரல்கொடுக்கும் தினமாக வீதியோர சிறுவர்களுக்கான சர்வதேச தினம்

(International Day for Street Children) ஆண்டுதோறும் ஏப்ரல் 12ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

இத்தினம் மொராக்கோ, உகாண்டா, எத்தியோப்பியா, குவாத்தமாலா, இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகளில் உள்ள வீதியோர சிறுவர்களுக்காக கடைபிடிக்கப்படுகிறது. அத்துடன் ஐக்கிய இராஜ்ஜியம், அயர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் பள்ளிச் சிறுவர்களும் இத்தினத்தை கடைபிடிக்கின்றனர்.

நோக்கம்:

வீதியோர சிறுவர்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்நாள் கொண்டாடப்படுகிறது.

வீதியோர சிறுவர்களுக்கு கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு போன்ற அடிப்படை உரிமைகளை வழங்குவதற்கான முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

Hindusthan Samachar / Durai.J