ஜம்மு–காஷ்மீரில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.6 பதிவு
காஷ்மீர் , 12 ஏப்ரல் (ஹி.ச.) ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியில் இன்று அதிகாலை 4:32 மணி அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் சில வினாடிகள் நீடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதும்
J


காஷ்மீர் , 12 ஏப்ரல் (ஹி.ச.)

ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியில் இன்று அதிகாலை 4:32 மணி அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் சில வினாடிகள் நீடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டதும் மக்கள் பதற்றமடைந்து வீடுகளிலிருந்து வெளியேறினர்.

பல இடங்களில் அதிர்வு தெளிவாக உணரப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலநடுக்கத்தால் உடனடி உயிரிழப்பு அல்லது பெரிய அளவிலான சேதங்கள் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.

இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிகாரிகள் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

நிலநடுக்கத்தின் மையப்பகுதி மற்றும் ஆழம் குறித்த முழுமையான தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA