ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் சட்டவிரோதமாக கசிந்தது - தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்
சென்னை, 12 ஏப்ரல் (ஹி.ச.) ஜனநாயகன் திரைப்படம் அதிகாப்பூர்வ வெளியீட்டுக்கு முன்பே இணையத்தில் சட்டவிரோதமாக வெளியான சம்பவத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அந்தக் கண்டனத்தில் தெரிவித்துள்ளதாவது, இது ஒரு சாதாரண சட்ட மீ
Act


Hh


சென்னை, 12 ஏப்ரல் (ஹி.ச.)

ஜனநாயகன் திரைப்படம் அதிகாப்பூர்வ வெளியீட்டுக்கு முன்பே இணையத்தில் சட்டவிரோதமாக வெளியான சம்பவத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அந்தக் கண்டனத்தில் தெரிவித்துள்ளதாவது,

இது ஒரு சாதாரண சட்ட மீறல் அல்ல,

மக்களை மகிழ்விக்கும் கலைத்துறைக்கே எதிரான திட்டமிட்ட தாக்குதல் என சங்கம் தெரிவித்துள்ளது.

திரையரங்குகளில் திரை திறக்கும்முன்பே படைப்பின் மதிப்பையும் எதிர்காலத்தையும் பாதிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் கசிவு செய்யப்பட்டிருப்பது, கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் உழைப்புக்கு எதிரான கொடூரமான செயல் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு திரைப்படம் என்பது வெறும் கற்பனைக்கதை அல்ல.

அது ஆயிரக்கணக்கானோரின் உழைப்பு, கனவு, வாழ்வாதாரம் ஆகியவற்றின் ஒருங்கிணைவு. எனவே, இத்தகைய கசிவு சம்பவங்கள் முழு திரைத்துறையின் மரியாதையையும் பாதிக்கின்றன என்று சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இந்த சட்டவிரோத செயலுக்கு காரணமானவர்களை கண்டறிந்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அது எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றங்களுக்கு தடையாக அமைய வேண்டும் என்றும் சங்கம் கோரியுள்ளது.

மேலும், இது ஒரே ஒரு திரைப்படத்தைச் சார்ந்த பிரச்சினை அல்ல.

மொத்த கலைத்துறையின் பாதுகாப்பைச் சார்ந்த முக்கிய விடயம் என்பதால், கலைஞர்கள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இத்தகைய இணையக் களவுகளைத் தடுக்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திரைத்துறையைச் சேர்ந்த அனைத்து அமைப்புகளும் இணைந்து உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும், இந்த முயற்சியில் தென்னிந்திய நடிகர் சங்கம் முழுமையாக இணைந்து செயல்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு அறிக்கை மட்டுமல்ல… கலைக்காக ஒன்றிணையும் அழைப்பு என்றும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ