‘ஜனநாயகன்’ படம் லீக்,சமூக வலைதள பக்கங்கள் முடக்கம் - சைபர் கிரைம் போலீசார் தீவிர நடவடிக்கை
சென்னை, 12 ஏப்ரல் (ஹி.ச.) தமிழகத்தில் விரைவில் வெளியாக இருந்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் முன்கூட்டியே இணையத்தில் கசிந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்
Jananayakan


சென்னை, 12 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழகத்தில் விரைவில் வெளியாக இருந்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் முன்கூட்டியே இணையத்தில் கசிந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

படம் சமூக வலைதளங்கள் மற்றும் சில இணையதளங்களில் பகிரப்பட்டதை அடுத்து, அந்த தளங்கள் மற்றும் டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களை போலீசார் அடையாளம் கண்டு முடக்கி வருகின்றனர்.

மேலும், படத்தை முதலில் பதிவேற்றம் செய்த நபரை கண்டறிய ஐ.பி (IP) முகவரிகளை கொண்டு தடயவியல் ஆய்வு நடைபெற்று வருகிறது.

இந்த லீக்கின் பின்னணியை அறிய, படம் முழு நகல் யாரிடம் இருந்தது, அது எவ்வாறு வெளியேறியது, அந்த நேரத்தில் தொடர்புடையவர்களாக இருந்தவர்கள் யார் என்பதையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தேவையானவர்களை நேரில் அழைத்து விசாரணை நடத்தும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

திரைப்பட வெளியீட்டுக்கு முன் இப்படிப்பட்ட கசிவுகள் ஏற்படுவது திரைப்படத் துறைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில், குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / P YUVARAJ