கொடைக்கானலுக்கு படையெடுக்கும்  சுற்றுலா பயணிகளால் இரண்டாவது நாளாக போக்குவரத்து நெரிசல்
திண்டுக்கல், 12 ஏப்ரல் (ஹி.ச.) திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினம் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கமான ஒன்றாகும் . இந்த நிலையில் தரைப்பகுதியில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக அதிலிருந்
போக்குவரத்து நெரிசல்


திண்டுக்கல், 12 ஏப்ரல் (ஹி.ச.)

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினம் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கமான ஒன்றாகும் .

இந்த நிலையில் தரைப்பகுதியில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக அதிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக கொடைக்கானலுக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முழுவதும் பிரதான சாலைகள் மற்றும் சுற்றுலா தளங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்பட்டது

அதனை தொடர்ந்து தற்போது இரண்டாவது நாளாக இன்று காலை முதலே தொடர்ந்து பிரதான சாலைகளில் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக சுற்றுலா தளங்களுக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் பயணிகள் அவதி அடைந்து வருவதுடன் உள்ளூர் மக்களும் தங்களது வேலைகளுக்கு செல்ல பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.

தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கான அதிகரித்து வரும் நிலையில் ஆங்காங்கே கூடுதலான போக்குவரத்து காவல் துறையினரை பணியில் அமர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை எழுந்து வருகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam