Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 12 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி வரும் ஏப்ரல் 15-ஆம் தேதி கன்னியாகுமரி வரவுள்ளார்.
அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யவுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி நாகர்கோவிலில் வேப்பமூடு சந்திப்பிலிருந்து வடசேரி எம்ஜிஆர் சிலை வரை சாலை ரோட் ஷோ மேற்கொள்கிறார்.
இதில், பாஜக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகப் பங்கேற்கவுள்ளனர்.
இந்த நிலையில் தமிழக பாஜக பூத் கமிட்டி கூட்டம் நாளை(ஏப்ரல் 13) மாலை நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் இன்று தமிழில் பதிவிட்டிருப்பதாவது,
திமுகவின் மோசமான நிர்வாகத்தை அம்பலப்படுத்தி, மாநில வளர்ச்சிக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொலைநோக்குப் பார்வையை விரிவாக எடுத்துரைத்த நமது தமிழக பாஜக செயல்வீரர்களை எண்ணி நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
ஏப்ரல் 13 அன்று மாலை நடைபெறும் 'எனது வாக்குச்சாவடி, வலிமையான வாக்குச்சாவடி கலந்துரையாடல்' நிகழ்ச்சியின் போது, கடினமாக உழைக்கும் நமது செயல்வீரர்களுடன் நான் உரையாடவிருக்கிறேன்.
என்று குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b