சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னை, 12 ஏப்ரல் (ஹி.ச.) கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற
பெட்ரோல்


சென்னை, 12 ஏப்ரல் (ஹி.ச.)

கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம், ஈரானுடனான இஸ்ரேல், அமெரிக்க மோதல், வளைகுடா நாடுகள் மீதான ஈரான் தாக்குதல் போன்றவற்றால் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை எட்டினாலும், மத்திய அரசின் நடவடிக்கையால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி தொடருகிறது.

இந்நிலையில், சென்னையில் இன்று (12.04.2026 - ஞாயிற்றுக்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.84-க்கும், டீசல் ரூ.92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேவேளை, இயற்கை எரிவாயு(Compressed Natural Gas) ரூ.91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஈரானுடன் அமெரிக்கா செய்துள்ள தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பின் காரணமாக வரும் காலங்களில் கச்சா எண்ணெயின் விலை குறைவாய் இருப்பதாக சொல்லப்படுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P