புதுச்சேரி - மைசூர் இடையே புதிய வந்தே பாரத் ரயில் விரைவில் தொடக்கம்!
புதுச்சேரி, 12 ஏப்ரல் (ஹி.ச.) புதுச்சேரியிலிருந்து பல்வேறு மாநிலங்களை இணைக்கும் வகையில் தற்போது புதிய வந்தே பாரத் ரயில் ஒன்று விரைவில் அறிமுகமாக இருக்கிறது. புதுச்சேரியிலிருந்து தினசரி ரயில்கள், அதிவிரைவு ரயில்கள் மற்றும் வாராந்திர எக்ஸ்பிரஸ்
Vande Bharat train


புதுச்சேரி, 12 ஏப்ரல் (ஹி.ச.)

புதுச்சேரியிலிருந்து பல்வேறு மாநிலங்களை இணைக்கும் வகையில் தற்போது புதிய வந்தே பாரத் ரயில் ஒன்று விரைவில் அறிமுகமாக இருக்கிறது.

புதுச்சேரியிலிருந்து தினசரி ரயில்கள், அதிவிரைவு ரயில்கள் மற்றும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்கள் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன.

எனினும் இதுவரை புதுச்சேரிக்கு நேரடியாக வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்படவில்லை என்பது குறிப்படத்தக்கத்து.

ஆனால், தற்போது அறிமுகமாகப் போகும் இந்த புதிய புதுச்சேரி வந்தே பாரத் ரயில் மூலம் பிற தென் மாநிலங்களுக்கு செல்ல விரும்பும் பயணிகள், சுலபமாக விழுப்புரம் வழியாக செல்லும் வந்தே பாரத் ரயில்களில் பயணிக்க முடியும்.

மேலும் வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை காலங்களில் பெங்களூரில் இருந்து புதுச்சேரிக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மிக அதிகம், அதனுடன் இதற்கான பயண நேரமும் சுமார் 16 மணிநேரம் வரை இருக்கிறது.

இந்நிலையில், தற்போது பயணிகளின் வைத்திருந்த நீதியா கால கோரிக்கையின் ஒரு பகுதியாக தற்போது புதுச்சேரி - மைசூர் புதிய வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இந்த புதிய திட்டத்தின் மூலம், பயண நேரம் பாதியாகக் குறைந்து வெறும் 8 மணிநேரத்தில் புதுச்சேரியை அடைய முடியும்.

கூடிய விரைவில் தொடங்கப்பட உள்ள இந்த புதிய புதுச்சேரி மைசூர் வந்தே பார்த் ரயில் திருவண்ணாமலை, வேலூர், காட்பாடி, பெங்களூர் வழியாக மைசூர் சென்றடையும். இதனால், பல மாவட்டங்களில் இருப்பவர்களுக்கு இந்த ரயில் சேவை வரப்பிரசாதமாக அமைக்கூடும். குறிப்பாக திருவண்ணாமலை அண்ணாமலையாரை தரிசிசன் செய்ய வருபவர்களும், மாதா மாதம் கிரிவலம் செல்ல விரும்பும் நபர்களுக்கும், அதனுடன் வேலூரில் அமைந்துள்ள பொற்கோவில், அங்கு படிக்கும் மாணவர்களுக்கும் வசதியாக இருக்கக்கூடும்.

பெங்களுரு மும்பை ஹைதராபாத் போன்ற இடங்களுக்கு புதுச்சேரியில் இருந்து ரயில்கள் இயக்கப்பட்டால் கூட, இவை வாராந்திர ரயில்கள் என்பதால், புதிய ரயில் தொடக்கத்தால் இந்த கஷ்டம் குறையும். வேறு மாநிலத்திற்கு செல்ல வேண்டும் என்றால், புதிய வந்தே பாரத் ரயில் வசதியாக இருக்கும்.

பெங்களூர் மைசூரில் இருப்பவர்கள், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் புதுச்சேரியில் இருந்து மைசூருக்கு சுற்றுலா செல்வது இனி இன்னும் எளிதாகப் போகிறது. தற்போது புதுச்சேரியிலிருந்து மைசூர் செல்வதற்குச் சாலை மார்க்கமாக சுமார் 16 மணி நேரம் பயணிக்க வேண்டியுள்ளது.

இருப்பினும், வந்தே பாரத் சூப்பர் பாஸ்ட் ரயில் சேவை பயன்பாட்டிற்கு வரும்போது, இந்த பயண நேரம் பாதியாகக் குறையும். இதன் மூலம் சுற்றுலாப் பயணிகள் மிகக் குறைந்த நேரத்தில் மைசூரைச் சென்றடைந்து தங்கள் விடுமுறையைத் திட்டமிட முடியும்.

புதுச்சேரி வந்தே பாரத் ரயிலில் ஏசி சேர் காரில் டிக்கெட் கட்டணம் 1200 ரூபாயாகவும், எக்ஸிக்யூடிவ் சேர் காரில், ரூபாய் 2500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN