Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 ஏப்ரல் (ஹி.ச.)
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்த உடன் விவசாயிகளின் பயிர் கடன் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும் என தருமபுரி சட்டமன்ற தொகுதி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி உழவர் சந்தையில் தீவிர வாக்கு சேகரித்தார்.
தருமபுரி சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளராக போட்டியிடும் சௌமியா அன்புமணி, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இன்று நகராட்சிக்குட்பட்ட ஒன்பதாவது வார்டு முதல் 15 ஆவது வார்டு வரை வீதி வீதியாக சென்று பொதுமக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரித்தார்.
தொடர்ந்து உழவர் சந்தைக்கு சென்ற சௌமியா அன்புமணி அங்கிருந்த பொதுமக்கள் விவசாயிகள் வியாபாரிகள் என அனைவரிடமும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய சௌமியா,
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் பொதுமக்கள் மத்தியில் திமுக ஆட்சியின் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சனைகளால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதை பொருட்கள் அதிக அளவில் கிடைக்கிறது இதனால் இளைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்த உடன் விவசாயிகளின் பயிர் கடன் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் அதற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் எனக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என சௌமியா அன்புமணி கேட்டுக்கொண்டார்.
Hindusthan Samachar / P YUVARAJ