Enter your Email Address to subscribe to our newsletters

ஸ்ரீநகர் , 12 ஏப்ரல் (ஹி.ச.)
இமயமலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற அமர்நாத் குகைக்கோவில் நோக்கி ஆண்டுதோறும் நடைபெறும் புனித அமர்நாத் யாத்திரை 2026-ஆம் ஆண்டுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, இந்த ஆண்டுக்கான யாத்திரை ஜூலை 3-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 28-ஆம் தேதி வரை நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 57 நாட்கள் யாத்திரை நடைபெற உள்ளது.
யாத்திரையில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் ஏப்ரல்
15-ஆம் தேதி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
யாத்திரை பாதுகாப்பு மற்றும் பக்தர்களின் வசதிக்காக தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.
இமயமலையின் உயரமான பகுதியில் அமைந்துள்ள இந்த புனித குகைக்கோவிலில் இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசிப்பது மிகப் புனிதமாக கருதப்படுகிறது.
ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடினமான மலைப்பாதைகளை கடந்து இந்த யாத்திரையில் பங்கேற்று வருகின்றனர்,
என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA