திமுகவிற்கும் தவெகவிற்கும் மட்டும் தான் போட்டியா? - 'நோ கமெண்ட்ஸ்' என முதல்வர் ஸ்டாலின் பதில்
பரமக்குடி, 12 ஏப்ரல் (ஹி.ச.) ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைப்பயிற்சி சென்றபடியே திமுக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் ''ஜனநா
திமுகவிற்கும் தவெகவிற்கும் மட்டும் தான் போட்டியா? - 'நோ கமெண்ட்ஸ்' என முதல்வர் ஸ்டாலின் பதில்


பரமக்குடி, 12 ஏப்ரல் (ஹி.ச.)

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைப்பயிற்சி சென்றபடியே திமுக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை பிரச்சாரம் மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது செய்தியாளர்கள் 'ஜனநாயகன்' படம் லீக் ஆகி இருக்கும் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த முதல்வர் கூறியதாவது,

அதைப் பற்றி எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

நான் ஆதவ் அர்ஜுனா பற்றிய செய்திகளை எல்லாம் படிப்பதில்லை.

எடப்பாடி பழனிசாமி தோல்வியின் விரக்திக்கு போய்விட்டார்.

நான் நடப்பது இதற்காக நடப்பதில்லை எப்பொழுதும் நடப்பேன்.

எந்த ஊருக்கு போனாலும் சென்னையில் இருந்தாலும் சரி வெளியூருக்கு போனாலும் சரி காலையில் நடப்பது என்னுடைய பழக்கம்.

அது ஒவ்வொரு ஏரியாவிலும் நடக்கும் பொழுது மக்களைச் சந்திக்கிறேன்.

தேர்தல் நேரம் என்பதால் மக்கள் என்னைச் சந்திக்கிறார்கள்.

உற்சாகப்படுத்துகிறார்கள். அது உற்சாகமாக இருக்கிறது. என்று கூறினார்.

திமுகவிற்கும் தவெகவிற்கும் மட்டும் தான் போட்டி என விஜய் சொல்லி வருகிறார் என்ற கேள்விக்கு,

முதல்வர் ஸ்டாலின் பதில் கூறுகையில்,

அதைப் பற்றி எல்லாம் பதில் சொல்ல நான் தயாராக இல்லை. நோ கமெண்ட்ஸ்.

அதிமுகவின் முகமூடியைப் போட்டுக் கொண்டு பிஜேபி உள்ளே வருகிறது. அதனால் இது திமுகவிற்கும் டெல்லிக்குமான தேர்தல் தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b