Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பத்தூர், 12 ஏப்ரல் (ஹி.ச.)
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 12-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அதிமுக வேட்பாளர் கே.சி.வீரமணி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இந்த பிரச்சாரத்தின் போது, அவருக்கு பொதுமக்களிடையே உற்சாகமான வரவேற்பு கிடைத்தது.
கிராமங்களின் பல பகுதிகளில் மக்கள் திரண்டுகொண்டு அவரை வரவேற்றனர்.
மேலும், தனது அமைச்சரகாலத்தில் மேற்கொண்ட நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகளை எடுத்துக்கூறி, மீண்டும் வாய்ப்பு வழங்குமாறு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
அத்துடன், வீடு வீடாகச் சென்று மக்களிடம் நேரடியாக சந்தித்து ஆதரவு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டார்.
Hindusthan Samachar / GOKILA arumugam