Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 12 ஏப்ரல் (ஹி.ச.)
திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் திண்டுக்கல் சீனிவாசன் அம்மா ஆட்சியில் விலைவாசி கடுமையாக உயர்ந்தது என உளறியது அதிமுகவினரை அதிர்ச்சி அடைய செய்தது.
2026 சட்டமன்ற தேர்தலில் திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும் அதிமுக பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன் போட்டியிடுகிறார்.
அவரை எதிர்த்து திமுக வேட்பாளர் ஐபிஎஸ் செந்தில் குமார் போட்டியிடுகிறார்.
போட்டி மிகக் கடுமையாக இருக்கும் நிலையில் திண்டுக்கல் நகர் மற்றும் ஊரகப்பகுதிகளில் சீனிவாசன் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் திண்டுக்கல் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட கக்கன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தனது ஆதரவாளருடன் சென்று திண்டுக்கல் சீனிவாசன் வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியில் 30 ரூபாய்க்கு அரிசி விற்றது தற்போது 90 ரூபாய் 100 ரூபாய் என விற்கிறது.
அம்மா ஆட்சியில் விலைவாசி கடுமையாக உயர்ந்தது எனறார். ஸ்டாலின் ஆட்சியில் விலைவாசி அதிகமாக இருக்கிறது என்பதற்கு பதிலாக அம்மா ஆட்சியில் விலைவாசி கடுமையாக உயர்ந்தது என திண்டுக்கல் சீனிவாசன் பேசியதால் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கடந்த சில தினங்களாகவே திண்டுக்கல் சீனிவாசன் பிரச்சாரத்தின் போது உளறி கொட்டி வரும் நிலையில் தற்போது மீண்டும் உளறி இருப்பது கட்சியினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P