Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 12 ஏப்ரல் (ஹி.ச.)
மதுரையில் நடைபெறும் பாஜக நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து விமானம்
மூலம் மதுரை வந்த மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் செய்தியாளர்களை
சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
தனது அன்பிற்குரிய நண்பரும் சகோதரருமான டாக்டர் பேராசிரியர் சீனிவாசன்
அவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதற்காக மதுரை தெற்கு தொகுதியில்
இருப்பதில் தாம் மட்டற்ற மகிழ்ச்சி அடைவதாக கூறினார். பேராசிரியர் சீனிவாசன் மதுரையின் எதிர்காலத்தை மாற்றியமைக்கக்கூடிய ஒரு சிறந்த கல்வியாளர் என்றும் மத்திய அமைச்சர் புகழாரம் சூட்டினார்.
மேலும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி
(NDA), இந்தத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, புரட்சித் தலைவி செல்வி
ஜெயலலிதா அவர்கள் தமிழகத்திற்கு வழங்கிய அந்தச் சிறந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதற்குத் தயாராக உள்ளதாக உறுதிபட தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலினின் ஊழல் நிறைந்த, திறமையற்ற ஆட்சி தமிழக மக்களால் தோற்கடிக்கப்படும் என்ற மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், டாஸ்மாக், மின்சார வாரியம், ஒப்பந்தங்கள், டெண்டர்கள், பணியிட மாற்றங்கள் என அனைத்திலும் ஊழல் மலிந்து காணப்படுகிறது என்றார்.
ஊழல் பணம் கொடுக்காமல் வேலை வாய்ப்புகள் கூட வழங்கப்படுவதில்லை என்ற மத்திய அமைச்சர், ஸ்டாலினின் ஆட்சியின் கீழ் நில மாஃபியாக்கள் மற்றும் மணல் மாஃபியாக்கள் தமிழகத்தை ஆளுகிறார்கள் என்றார்.
திமுகவின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளரான உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்களால் தமிழகத்தின் கலாச்சாரம் மற்றும் பெருமை மிகவும் புண்பட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்த பியூஸ் கோயல், தமிழக மக்கள் ஒருபோதும் உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றார்.
தமிழ் கலாச்சாரம், தமிழ் பெண்கள் மற்றும் மக்களின் உணர்வுகளை
மதிக்காத ஒருவரை அவர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P