விசில் சத்தத்திற்கு ஏமாறாதீர்கள் - வாக்காளர்களுக்கு பிரேமலதா அட்வைஸ்
சேலம், 12 ஏப்ரல் (ஹி.ச.) சேலம் மாவட்டம், ஓமலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காடையாம்பட்டி மற்றும் ஓமலூர் தாலுக்கா பகுதிகளில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா


சேலம், 12 ஏப்ரல் (ஹி.ச.)

சேலம் மாவட்டம், ஓமலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காடையாம்பட்டி மற்றும் ஓமலூர் தாலுக்கா பகுதிகளில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா

விஜயகாந்த் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர்,

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி ஒரு மகத்தான கூட்டணி என்றும், இந்த தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று, அண்ணன் ஸ்டாலின் 2வது முறையாக மீண்டும் முதலமைச்சராவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் ஓமலூர் தொகுதி மக்களுக்கு

முழுமையாக கிடைத்திட தேமுதிக பாடுபடும் என்ற பிரேமலதா, தற்போதைய அதிமுக எம்.எல்.ஏ, அலுவலகத்தை கூட திறக்காமல் மக்களை உதாசீனப்படுத்தியதாக பொதுமக்கள் வேதனையுடன்

தெரிவித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

தேமுதிக வேட்பாளர் வெற்றி பெற்றால் ஓமலூர் தொகுதியை தமிழ்நாட்டிலேயே சிறந்த தொகுதியாக மாற்றுவார் என குறிப்பிட்ட அவர், கேப்டன் பெயரில் இலவசக் கணினி மற்றும் ஏ.ஐ பயிற்சி மையம் அமைக்கப்படும்.

வேளாண் கல்லூரி மற்றும் அதிநவீன நூலகம் உருவாக்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்தார்.

தொகுதியில் உள்ள அனைத்து

ஏரிகளும் காவிரி உபரி நீரால் நிரப்பப்படும் என்றும் தரமான குடிநீர் விநியோகம் உறுதி

செய்யப்படும் என்றும் பிரேமலதா கூறினார்.

மேலும், தமிழக வெற்றிக் கழகத்தை மறைமுகமாக விமர்சனம் செய்த அவர், தற்போது புதிதாக ஒருவர் விசில் அடித்துக் கொண்டு வந்துள்ளதாகவும் அந்த சத்தத்திற்கு மக்கள் யாரும் ஏமாந்துவிட கூடாது என்றும் எச்சரித்தார்.

மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்ட பிரேமலதா, வரும் 23ஆம் தேதி வாக்கு இயந்திரத்தின் முதல் பட்டனை அழுத்தி முரசு சின்னத்திற்கு

வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P