நெருங்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் -அதிகாலையிலேயே வாக்கிங் சென்று வாக்கு சேகரித்த முதலமைச்சர்..!
ராமநாதபுரம், 12 ஏப்ரல் (ஹி.ச.) தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காலை, மதியம், மாலை என மூன்று வேலைகளிலும் தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அனைத்து க
முதலமைச்சர்


ராமநாதபுரம், 12 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காலை, மதியம், மாலை என மூன்று வேலைகளிலும் தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், நான்காம் கட்டமாக தனது பரப்புரையை மேற்கொண்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பரமக்குடி சட்டசபை தொகுதி தி.மு.க. வேட்பாளர் கதிரவனை ஆதரித்து சாலையில் நடந்து சென்று வாக்கு சேகரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் பொதுமக்கள் கைகுலுக்கி, செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

அப்போது அனைத்து தரப்பு மக்களிடமும் திமுக ஆட்சி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். தனது தலைமையிலான நல்லாட்சி தொடர உதயசூரியன் சின்னத்திலேயே வாக்களிக்க வேண்டும் என பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P