Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 12 ஏப்ரல் (ஹி.ச.)
நீலகிரி மாவட்ட மலைத்தொடரில் உயரமான சிகரமான தொட்டபெட்டா மலைச்சிகரம் கடல் மட்டத்திலிருந்து 2637 மீட்டர் அதாவது சுமார் 8500 அடி உயரத்தில் உள்ளது.
உதகை அருகே உள்ள தொட்டபெட்டா மலை சிகரத்தைக் காண தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
நேற்று மாலை திடீரென ஒரு ஒற்றை யானை மலை சிகரத்திற்கு செல்லும் சாலையில் நடந்து வந்தது. அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் யானையை தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
யானை தொடர்ந்து தொட்டபெட்டா லை சிகரத்தை ஒட்டி உள்ள வனப்பகுதியில் முகாமிட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி தொட்டபெட்டா மலைச்சிகரம் இன்று ஒரு நாள் மூடப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் மலை சிகரத்தை காண சுற்றுலா பயணிகள் யாரும் வர வேண்டாம் என வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
யானையின் நடமாட்டத்தை தரை வழியாகவும் ட்ரோன் கேமரா மூலமாக தீவிரமாக வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
தற்போது இந்த பகுதிக்கு வந்துள்ள ஒற்றைக்காட்டு யானை கடந்த ஆண்டும் இதே போல வந்து ஒரு வாரம் முகாமிட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.
வார விடுமுறையான இன்று தொட்டபெட்டா மலை சிகரத்தை காண வந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
Hindusthan Samachar / vidya.b