Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 ஏப்ரல் (ஹி.ச)
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திலிருந்து வெளியே வர முயன்ற போது, வெளியே அதிக அளவில் தொண்டர்கள் குவிந்திருந்ததால் சில நொடிகளிலேயே மீண்டும் உள்ளே சென்றார்.
கன்னியாகுமரியில் நடைபெறவிருந்த ரோட்ஷோவில் பங்கேற்க தனது இல்லத்திலிருந்து வெளியே வர முயன்றார்.
அதாவது விஜய் நடந்தே வெளியே வந்து பொதுமக்களை சந்திக்க திட்டமிட்டிருந்தார்.
ஆனால், அவரை பார்க்க ஏராளமான தொண்டர்கள் திரண்டிருந்ததால் பாதுகாப்பு மற்றும் நெரிசல் காரணமாக அவர் கையை அசைத்து வாழ்த்து தெரிவித்துவிட்டு உடனடியாக வீடு திரும்பினார்.
இதனால், திட்டமிட்டபடி நடந்தே செல்ல முடியாமல், வழக்கம் போல காரில் பயணம் மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டது.
கன்னியாகுமரி மகாதானபுரம் ரவுண்டானா பகுதியில் இருந்து கன்னியாகுமரி சீரோ பாயிண்ட் வரை பைபாஸ் ரோட்டில் ரோடுஷோ செல்கிறார்.
Hindusthan Samachar / GOKILA arumugam