Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 12 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழக சட்டமன்ற தேர்தலையோட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர் மக்களுக்கு தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளார்.
லஞ்சம் இல்லாமல் ஒவ்வொருவருக்கும் அரசின் நலத்திட்டம் சென்று சேரும் அதற்கென அட்டை வழங்கப்படும் என்று கூறினார். குறிப்பாக லஞ்சம் கொடுத்து வேதனை அடைய தேவை இல்லை.
வீடு வாசலில் அரசாங்கத் திட்டங்கள் வரும். இது ஸ்டாலின் சார் விடும் கதை இல்லை.
அறிவியல் பூர்வமாக சாத்தியமான ஒன்றைத்தான் சொல்கிறேன் என்று கூறினார்.
மக்களிடம் இருந்து ஒரு ரூபாய் கூட கூடுதல் வரி வசூலிக்கப்படாது.தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைந்தால் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம் வெற்றி தமிழ்நாடு சூப்பர் ஆப் உருவாக்கப்படும். தமிழ்நாடு அரசின் பட்ஜெட் ஒதுக்கப்படும்.
இது எல்லாம் சிதம்பரம் ரகசியம் போல இருக்கிறது .அதனை எல்லாம் நாம் மாற்றுவோம் மக்கள் வெறும் வாக்காளர்களாக இல்லாமல் பங்காளர்களாக இருப்பார்கள் என்று கூறினார்.
மாநிலத்தின் வளர்ச்சிக்கான யோசனைகள் மக்கள் கூறும் வகையில் இணையதளம் உருவாக்கப்படும். மக்கள் அரங்கம் திட்டத்தில் மக்கள் டிஜிட்டல் தளத்தில் மாடுகளை சட்டமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிடப்படும். 5 லட்சம் பேர் கையெழுத்திட்டு மனு அளித்தால் அது சட்டமன்றத்தில் விவாதிக்கப்படும்.
தமிழக அரசின் சேவைகள் தாமதமானால் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்.சட்டமன்ற கூட்டத்தொடரில் ஒரு நாள் முழுவதும் மக்களின் மனுக்களுக்காகவே ஒதுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / GOKILA arumugam