கன்னியாகுமரியில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வாகனப் பிரசாரம்
சென்னை, 12 ஏப்ரல் (ஹி.ச) தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை நிலையச் செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கட்சியின் தலைவர் விஜய், கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். மகாதானபுரம் ஜங்ஷன் முதல் ஜீரோ பாயிண்ட் வரை மதியம் 2
TVK Vijay


சென்னை, 12 ஏப்ரல் (ஹி.ச)

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை நிலையச் செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கட்சியின் தலைவர் விஜய், கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

மகாதானபுரம் ஜங்ஷன் முதல் ஜீரோ பாயிண்ட் வரை மதியம் 2 மணி முதல் வாகனப் பேரணியாக இந்தப் பிரசாரம் நடைபெற உள்ளது. இதற்கான அனுமதி தேர்தல் ஆணையத்திடமிருந்து பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரசார நிகழ்ச்சிக்காக தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு மற்றும் ஒழுங்கை கருத்தில் கொண்டு பல்வேறு முக்கிய அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

குறிப்பாக, விஜய் பயணம் செய்யும் பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எந்தவொரு வாகனங்களிலும் யாரும் பின்தொடரக்கூடாது எனக் கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை அனைவரும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்றும், பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர்கள், பள்ளி மாணவர்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் உடல்நலம் குன்றியவர்கள் நேரில் வராமல், சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சி நேரலைகள் மூலம் நிகழ்ச்சியைப் பார்வையிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அனுமதி பெற்றவர்கள் மட்டுமே நேரில் கலந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கட்சி தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ