தொடர் விடுமுறை எதிரொலி-நீலகிரி கூடலூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்..!
நீலகிரி, 12 ஏப்ரல் (ஹி.ச.) தொடர் விடுமுறையை ஒட்டி புகழ்பெற்ற சுற்றுலா தளமாக திகழும் நீலகிரி மாவட்டம் உதகைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை கடுமையாக அதிகரித்துள்ளது. அதிலும் கோடை வெயில் காரணமாக மக்கள் குளுகுளுவென ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களு
நெரிசல்


நீலகிரி, 12 ஏப்ரல் (ஹி.ச.)

தொடர் விடுமுறையை ஒட்டி புகழ்பெற்ற சுற்றுலா தளமாக திகழும் நீலகிரி மாவட்டம்

உதகைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை கடுமையாக அதிகரித்துள்ளது. அதிலும் கோடை வெயில் காரணமாக மக்கள் குளுகுளுவென ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இதன் காரணமாக நீலகிரி

மாவட்டத்தை ஒட்டி அமைந்துள்ள தமிழக - கேரளா மாநில எல்லை பகுதியான நாடுகாணி மற்றும் மேல் கூடலூர் ஆகிய சோதனைச் சாவடிகளில் இன்று காலை முதல் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டு வருவதால் சோதனைச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன.

இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் போக்குவரத்து நெரிசலை

சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே இன்று காலை முதல் சுற்றுலா

பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

கடந்த சில நாட்களாக உதகையில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து காணப்பட்ட

நிலையில் தொடர் விடுமுறை காரணமாக கூட்டம் அதிகரிப்பால் சுற்றுலா தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P