Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி, 13 ஏப்ரல் (ஹி.ச.)
ஆந்திரப் பிரதேசத்தில் தொழில்துறை வளர்ச்சியை மேலும் வேகப்படுத்தும் வகையில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தொழில் அமைப்பில் உள்ள சிக்கல்களை நீக்கி, அனுமதி செயல்முறைகளை எளிமைப்படுத்தும் நோக்கில் மத்திய அரசின் டீ-ரெகுலேஷன் திட்டம் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில் மத்திய எஃகுதுறை செயலாளர் சந்தீப் பௌண்ட்ரிக் மற்றும் மாநிலத்தின் உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாநில அரசின் செயல்திறன் மற்றும் வேகமான முன்னேற்றத்தை பாராட்டிய மத்திய செயலாளர்,
மத்திய அரசு திட்டங்களை விட ஆந்திரா மாநிலம் முன்னேறி செயல்படுகிறது என்று ஆச்சரியம் தெரிவித்தார்.
தொழில் அமைப்பிற்கு தடையாக உள்ள 800க்கும் மேற்பட்ட விதிகளை 100-க்கு உட்பட குறைக்க முதல்வர் உத்தரவிட்டார்.
மேலும், அனுமதிகள் மற்றும் லைசன்ஸ்களின் எண்ணிக்கையை ஒற்றை இலக்கத்திற்கு குறைக்கவும் அறிவுறுத்தினார். ஒருமுறை பதிவு செய்தால் அது ஆயுள் முழுவதும் செல்லுபடியாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
விண்ணப்பம் முதல் அனுமதி வழங்கும் வரை அனைத்து செயல்முறைகளும் முழுமையாக ஆன்லைனில் நடைபெற வேண்டும் எனவும், இதன் மூலம் தொழில் தொடங்கும் காலத்தை 40 சதவீதம் வரை குறைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதே நேரத்தில், விதிகள் எளிமைப்படுத்தப்பட்டாலும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் எந்த விதத்திலும் சமரசம் செய்யக் கூடாது என முதலமைச்சர் வலியுறுத்தினார்.
மூன்றாம் தரப்பு ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவும் உத்தரவிட்டார்.
இது குறித்து முதலமைச்சர் கூறுகையில்,
Ease of Doing Business மட்டுமல்ல, ‘Speed of Doing Business’ மற்றும் ‘Speed of Delivering Governance’ என்ற புதிய கொள்கையை அரசு செயல்படுத்தி வருகிறது என்றார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA