முதல்வர் தான் செய்த சாதனைகளை கூறி வாக்கு கேட்கவில்லை,பொய் பிரச்சாரங்களை மட்டுமே செய்கிறார் - அண்ணாமலை
மதுரை, 13 ஏப்ரல் (ஹி.ச.) மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவை ஆதரித்து முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சோலையழகுபுரத்தில் பிரச்சாரம் செய்கிறார். முன்னதாக செல்லூர் ராஜூ அண்ணாமலையை வரவேற்று பேசுகையில், ப
அண்ணாமலை


மதுரை, 13 ஏப்ரல் (ஹி.ச.)

மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவை

ஆதரித்து முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சோலையழகுபுரத்தில் பிரச்சாரம் செய்கிறார்.

முன்னதாக செல்லூர் ராஜூ அண்ணாமலையை வரவேற்று பேசுகையில்,

புரட்சித்தலைவர்

எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா என முழக்கம் எழுப்பியதோடு பாரத் மாதா கி,

பாரத் மாதா கி என மூன்று முறை குறிப்பிட்டு முழக்கம் எழுப்பினார்.

அண்ணாமலை வருகிறார் என்றதும் திமுககாரர்கள் ஓடிவிட்டனர்.

கர்நாடாகாவில் ஐபிஎஸ் ஆக இருந்த போது சிங்கமாக,எதிரிகளுக்கு

சிம்ம சொப்பனமாக

இருந்தவர் நமது தலைவர் அண்ணாமலை.

முத்துராமலிங்கத்தேவரின் மறு உருவம் அண்ணாமலை. அண்ணாமலையை தலைவர் இளம்தலைவர்

என புகழ்ந்து பேசினார்.

இன்று பாஜக பட்டி தொட்டியெங்கும்

வளர்ந்துள்ளது.

அதற்கு காரணம் அண்ணாமலையின் சிறப்பான பணி, அண்ணாமலை நாளை என்ன அறிக்கை, என்ன

பேட்டி கொடுக்கப்போகிறாரோ என மடியில் நெருப்பை கட்டி கொண்டு அமைச்சர்கள்

இருந்தார்கள். அப்படிப்பட்ட தலைவர் அண்ணாமலை என பேசினார்.

தலைவர் பேசட்டும். நான் கேட்கிறேன்.

அண்ணாமலை பேச்சுக்கு நான் இடையூறாக இருக்க மாட்டேன். தலைவர் அண்ணாமலை பேசட்டும் என கூறினார்.

தொடர்ந்து அண்ணாமலை பேசுகையில்,

செல்லூர் ராஜூ அண்ணன் எப்போதும் புன்னகையுடன் தான் இருப்பார். எளிய மனிதர்.

எதையும் மனதில் வைத்துக்கொள்ளாதவர். எம்ஜிஆருக்கு திருப்புமுனை தந்த மண் மதுரை.

பணமா பாசமா என்றால் நிச்சயம் மதுரை பாசத்திற்கு தான் அடிபணியும்.

மதுரைக்கு மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தியது திமுக. மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் சொத்துவரியில் மட்டுமே ஊழல் செய்தார்கள்.

மதுரை நகரை கூறுபோட்டு மேயரை கைத்தடியாக வைத்துக்கொண்டார்கள் திமுக

அமைச்சர்கள். அமைச்சர் மூர்த்தி மேடையில் இருந்து ஆட்சியரை எழ செய்தார்.

காரணம் உதயநிதியின் மகனுக்காக. வாடா போட ஏய் என அதிகாரிகளை மக்களை மூர்த்தி இப்படியே பேசுகிறார்.

என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்க போகிறது. கட்டாயம் எடப்பாடி பழனிசாமி

முதல்வராவார். திமுக வேண்டாம் என்ற குரலே தமிழகத்தில் கேட்கிறது.

சட்டம் ஒழுங்கை GUN போல கையில் வைத்திருந்தவர் ஜெயலலிதா. அதனால் அவரை மிகவும் பிடிக்கும். ஒரு பிராந்திய கட்சி அதிகமுறை தமிழகத்தை ஆட்சி செய்துள்ளது. அன்பால் இணைந்த கூட்டணி அதிமுக பாஜக. முதல்வர் தான்செய்த சாதனைகளை கூறி வாக்கு

கேட்கவில்லை.

பொய்ப்பிரச்சாரங்களை மட்டுமே செய்கிறார்.

மதுரைக்கு மேட்ரோவை மாநில அரசு கேட்கவில்லை. எடப்பாடி பழனிசாமி எங்காவது அவர்

அப்பா பெயரை கூறி உள்ளாரா. ஆனால் முதல்வர் நான் யார் தெரியுமா என் அப்பா யார்

தெரியுமா என கேட்கிறார். ஒருவேளை அவர்களுக்கு சந்தேகம் இருக்குமா என்னவென்று

தெரியவில்லை.

அதிமுக ஆட்சியில் இருந்து வெளியே வந்த போது கடன் 4அரை லட்சம் கோடி. இன்று 10

லட்சம் கோடி கடன்.கணக்கே போட தெரியாமல் 6அரை லட்சம் டன் வாங்கி உள்ளார்

ஸ்டாலின். ஒரு நாளைக்கு ஒரு நபர் மீது 130 ரூபாய் கடன் வாங்குகிறார் ஸ்டாலின்.

ஸ்டாலினுக்கு சொல்லிக்கொடுத்த வாத்தியார் ஓகே. ஆனால் மாணவன் மக்கு.

மதுரை ஒரு இரும்புக்கோட்டை. மதுரை வெற்றி சரித்திர வெற்றியாக இருக்க வேண்டும்.

செல்லூர் ராஜூ வெற்றி பெற்று சென்னை சென்று வந்தால் பெரிய பொறுப்போடு தான் வருவார்.

அதிமுக வெற்றி பெற்றதும் விரைவில் மதுரை மெட்ரோவில் நாம் பயணம் செய்யலாம்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிலம் கொடுக்காமல் மரம் வெட்ட 8 மாத காலம் எடுத்துக்கொண்டு தாமதப்படுத்தியது திமுக அரசு. எங்கே அதிமுகவிற்கு பெயர்

சென்றுவிடுமோ என்ற அச்சத்தால் தாமதப்படுத்தினார்கள்.

ரகுபாலாஜி என யார் என்றே தெரியாத எந்தப்பகுதியை சேர்ந்தவர் என்று தெரியாத

ஒருவர் மேற்கில் திமுக வேட்பாளர். திருப்பரங்குன்றம் குழப்பத்திற்கு ரகுபாலாஜி

மனைவியும் காரணம்.

மேலே மோடி கீழே எடப்பாடி பழனிசாமி இருவரும் சேர்ந்து அருமையான வளர்ச்சி.

மத்திய அரசின் திட்டங்கள் எல்லாவற்றையும் திமுக அரசு தடுத்தார்கள்.

மதுரைக்கு 2021 கோடியில் எய்ம்ஸ், 550 கோடி பாலங்கள், 1853 கோடி பரமக்குடி

தேசிய நெடுஞ்சாலை, 230 கோடி தூத்துக்குடி மதுரை சாலை, 900 கோடி கன்னியாகுமரி

சாலை, 4300 கோடி மதுரை கோவை சாலை, 550 கோடி விமானநிலைய விரிவாக்கம், 700 கோடி அம்ரீத் திட்டம் என எவ்வளவோ திட்டங்களை மோடி மதுரைக்கு கொடுத்துள்ளார்.

நல்ல கண் மருத்துவரை வைத்து கண்ணை பரிசோதித்துவிட்டு மத்திய அரசு என்ன செய்தது

என நன்றாக பாருங்கள் ஸ்டாலின் என பேசினார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P