மெட்ரோ விவகாரத்தில் அமைச்சர்கள் பிடிஆர், மூர்த்தி பொய் பேசுகிறார்கள் - அண்ணாமலை
மதுரை, 13 ஏப்ரல் (ஹி.ச.) மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் செல்வதற்காக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில்: மதுரை தெற்கு தொ
பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து தி.மு.க. அரசு விவசாயிகளை ஏமாற்றி வருகிறது - அண்ணாமலை


மதுரை, 13 ஏப்ரல் (ஹி.ச.)

மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் செல்வதற்காக

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில்:

மதுரை தெற்கு தொகுதியில் நிதின் நபின் அவர்கள் மதுரை தெற்கு தொகுதியில் ராம

சீனிவாசன் அவர்களுக்கு பிரச்சாரம் மேற்கொண்டார். நானும் பங்கேற்க வாய்ப்பு

கிடைத்தது.

மெட்ரோ விவகாரத்தில் அமைச்சர் பிடிஆர், அமைச்சர் மூர்த்தியும் பொய்

பேசுகிறார்கள். அதற்காக அவர்கள் மதுரை மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க

வேண்டும்.

மதுரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையில் பேருந்து மட்டும் போவதற்கான பேருந்து

பாதை அமைக்க தான் கேட்டிருக்கிறீர்கள் இன்று இந்த திட்ட அறிக்கையில்

குறிப்பிட்டுள்ளதாக மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

நீங்கள் உண்மையிலேயே மெட்ரோ ரயில் திட்டம் கேட்டீர்கள் என்றால் மத்திய

அரசுக்கு நீங்கள் அனுப்பிய கடிதத்தை வெளியிடுங்கள்.நாங்கள் மதுரைக்கு மெட்ரோ

கொடுப்பது தடுத்து விட்டதாக அமைச்சர்கள் மதுரையில் பொய் சொல்கிறார்கள்.நாங்கள்

ஆட்சிக்கு வந்தவுடன் ஏன் நான்காம் தேதிக்கு மேல் புதிதாக திட்ட அறிக்கை மக்கள்

தொகையை குறிப்பிட்டு மெட்ரோ ரயில் திட்டத்தை பெற்று தருவோம். அக்டோபர் நவம்பர்

மாதத்திற்குள் எய்ம்ஸ் பணிகள் நிறைவடைந்து திறக்கப்படும்.

திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளரின் வேட்பு மனுவில் உள்ள அஃபிடவிட் வைத்து

தான் சொல்கிறோம். அவர் மீது கிரிப்டோ கரன்சி வழக்கு மற்றும் அவரது கணவர் மீது

பாலியல் வழக்கு உள்ளது. அதிமுக வேட்பாளர் ராஜன் சொல்லப்பா அவர்கள் மேயராக

இருந்து மதுரையை முன்னேற்ற பாதைக்கு எடுத்துச் சென்றுள்ளார் எனவே அதை

குறிப்பிட்டு பிரச்சாரம் மேற்கொண்டேன்.

மத்திய தொகுதியில் அண்ணன் சுந்தர்.சி வெளியூர்க்காரர் என்று பிடிஆர்

குறிப்பிடுகிறார். அவரும் பாதி நாள் வெளிநாட்டில் தான் சுற்று

இருந்திருக்கிறார்.மேயர் இந்திராணியின் கணவர் பி டி ஆர் உடன் தான் சுற்றிக்

கொண்டிருந்தார்.

அவர்கள் மெட்ரோ கேட்கவில்லை பேருந்து தான் கேட்டிருக்கிறீர்கள்.

உள்ளூர் சந்தையில் விலை போகாத மாடு வெளியூர் சந்தையில் விலை போகுமா என்பது போல

திமுக இங்கு திறந்தது போல வெளிநாட்டில் டாஸ்மாக் திறந்திருக்கிறோம் என்று

சொல்வார்களா. எதில் நம்பர் ஒன் என்று சொல்கிறார்கள்.

மத்திய அரசு கடிதம் எழுதவில்லை என்று நிதி அமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார்.

மாநில அரசு ஊக்கத்தொகை கொடுக்க முழுமையாக உரிமை இருக்கிறது. அதை நாங்கள்

தடுக்க மாட்டோம். முதல்வர் கடிதத்தை வெளியிடுவோம் என்று சொல்கிறார் நீங்கள்

வெளியிடுக்கிறீர்களா நாங்கள் வெளியிடவா. தேர்தல் நேரத்தில் இல்லாத கடிதத்தை

முதல்வர் பேசுகிறார்.

நிதியமைச்சாரின் கணவருக்கு இது தான் வேலை தேர்தல் நடக்கும் இடத்திற்கு சென்று

பெட்டியை எடுத்துக் கொண்டு சென்று உட்கார்ந்து விடுவார். இவர்கள் போடும்

இரண்டு எலும்பு துண்டை எடுத்துக் கொண்டு வந்து செய்தியாளர் சந்திப்பு வைத்து

அனைவரின் நேரத்தையும் வீணடிக்கிறார்கள்.

தமிழகத்தில் நடைபெறும் ஊழல் மற்றும் பாலியல் பிரச்சனைகள் குறித்து பேச

மாட்டார்கள். வேங்கை வயல் விவகாரம் குறித்து பிரபாகர் பேசமாட்டார்.

தமிழ்நாடு காங்கிரஸில் மாணிக்க தாகூர் ஒட்டி கொள்ளலாமா என இருக்கிறார்.

தேர்தல் பொறுப்பில் இருந்து எதற்கு ராஜினாமா செய்தார். மதுரை தெற்கு வடக்கு

தொகுதியை வாங்கியே தீருவோம் என்று முறுக்கினார். இப்போது வாங்கவில்லை என்றால்

கட்சியில் வெளியேறி இருக்க வேண்டும்.

முத்துராமலிங்க தேவர் ஐயா கால் நிகத்தில் இருக்கும் அழுக்கு கூட நான்

சமமில்லை.அண்ணன் செல்லூர் ராஜு அன்பானவர் எளிமையானவர் அவருக்கு பிரச்சாரம்

செய்ய வாய்ப்பு கிடைத்தது.

பெருமைப்படுத்த வேண்டும் என்பதற்காக அவர் சொன்ன கருத்து அது அவரது பெருந்தன்மை.

இரண்டு முனையாக மாறிக் கொண்டிருக்கிறது. திமுக தொண்டர்கள் கடுமையாக வேலை

பார்க்கிறார்கள் ஆனால் எதிர்ப்பலை அதிகம் ஆகிக்கொண்டிருக்கிறது. உழைத்துக்

கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தில் எவ்வளவு பிரச்சனை நடக்கிறது ஆனால் ஐபிஎல் பார்ப்பது தான்

முதலமைச்சரருக்கு வேலையா. இரு அணியிலும் இருக்கும் வீரர்கள் தமிழகத்தை

சேர்ந்தவர்கள் எல்லா ஊருக்கும் ஆடுகிறார்கள்.

கோபாலபுரத்தில் ஊழல்வாதிகளுக்கும் தமிழக மக்களுக்கும் இடையில் நடக்கும்

தேர்தல் தான் இது. டெல்லிக்கும் தமிழகத்திற்கும் நடக்கும் தேர்தல் இல்லை.

விஜய் அவருடைய கட்சிக்கு ஓட்டு கேட்கிறார். திமுக கட்சிக்கு ஒவ்வொரு பலம்

இருக்கும் நான் தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் பற்றி பேசுகிறேன்.

தமிழக வெற்றிக் கழக விஜய் பிரச்சாரத்திற்கு வரும் போது தேர்தல் ஆணையம் அனுமதி

கொடுக்கும் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டிய முறை முழுமையாக காவல்துறைக்கு

மட்டும் உள்ளது என்று சொல்ல முடியாது.

எல்லோரும் இதில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். முடிவில் அவர் பிரச்சாரத்தில்

பேச வேண்டும் இரண்டு நாட்களுக்கு முன்பு காரைக்குடியில் ரோட் சோவில் அவர்

பேசவில்லை என்று சொன்னார்கள் அதில் எனக்கு உடன்பாடு இல்லை அவர் பேச வேண்டும்.

பேசுவதற்கு அனுமதி கொடுக்க வேண்டும்.

அனைத்து இளைஞர்களும் நம்முடன் இருக்கிறார்கள் யாருக்கும் வருத்தம் இல்லை. இந்த

தேர்தல் இளைஞர்கள் தீர்மானிக்க கூடிய தேர்தல்.வாக்கு செலுத்தும் போது

சிந்தித்துப் போடுங்கள்.

புதுச்சேரியில் காங்கிரஸ் திமுக தோல்வி கூட்டணிக்கு இடையே ஒற்றுமை இல்லை.

திருமாவளவன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூன்று இடங்களில் தனித்து

போட்டியிட்டனர். இதுதான் அங்கு தோல்விக்கு முழு காரணமாக இருக்கும் மேலும்

அவர்களின் முதல்வர் வேட்பாளரில் குழப்பம் உள்ளது. ராகுல் காந்தி பிரச்சாரத்தை

ஒரே நாள் அதுவும் கடைசி நாளில் வந்து செய்துவிட்டு சென்றார். அப்போதும்

முதல்வர் பெயரை சொல்லவில்லை முதல்வரும் அங்கு பிரச்சாரத்திற்கு சென்ற போது

ராகுல் காந்தி பெயரை சொல்லவில்லை என்னை பொறுத்தவரை அங்கே இந்தியா கூட்டணி

படுதோல்வி அடையும்.

கேரளாவில் மும்முனை போட்டி. நிறைய தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும்.

கம்யூனிஸ்ட் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்.

மத்திய உள்துறை அமைச்சர் பிரச்சாரத்திற்கு வருகிறார். தேதி இருதி செய்யப்பட்டு

விட்டது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும்.

ஜனநாயகம் நிறைய பேரின் உழைப்பு, இரத்தம் உள்ளது. படம் வெளியாகி உள்ளது.

முறையாக சென்று பார்ப்போம் முறையாக செலுத்த வேண்டிய படம் அவர்களுக்கு சென்று

சேரட்டும். எங்கிருந்து படம் கசிந்தது அங்கிருந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தயாரிப்பு நிறுவனத்திற்கு நம்பிக்கை இருந்தால் சி பி ஐ நோக்கி செல்லட்டும் என

கூறினார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / GOKILA arumugam